வாஷிங்டன் டி.சி. ஈரானின் ஏவுகணை மற்றும் டிரோன் தளங்களை இலக்காக கொண்டு அமெரிக்கா 7 மணிநேரம் தாக்குதல் நடத்தி உள்ளது. ஹார்மூஸ் ஜலசந்தி பகுதியில் வர்த்தக கப்பல் ஒன்றை ஈரான் தாக்கியது சர்வதேச அளவில் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதற்கு ஈரானை பொறுப்பேற்க செய்யும் வகையில் ஈரானிய படைகளுக்கு எதிராக அமெரிக்கா தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. விமானங்கள், கப்பல்கள் இந்த சூழலில், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நேற்று கூறும்போது, ஹார்மூஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து பாதுகாப்பிற்காக ஈரான் மீது அமெரிக்கா புதிதாக தாக்குதல் நடத்தியுள்ளது. இதில், ஈரானின் அதிகாரத்துவம் பெருமளவில் அழிக்கப்பட்டு விட்டது என கூறினார். எடுத்துக்காட்டாக, ஈரானின் ராணுவத்திடம் 159 கப்பல்கள் இருந்தன. அவை தற்போது கடலுக்குள் மூழ்கடிக்கப்பட்டு விட்டன. ஈரானிடம் 200 விமானங்கள் இருந்தன. அவை அனைத்தும் அழிக்கப்பட்டு விட்டன. அவர்களுடைய ரேடார்கள், விமானங்களை தாக்கி அழிக்கும் கருவிகள், ஆயுதங்களை உருவாக்கும் திறன் என எல்லாவற்றையும் அழித்து விட்டோம். கற்காலம் ஈரானின் 84 சதவீத ராணுவ தளவாடங்கள் அழிக்கப்பட்டு விட்டன. வான் பாதுகாப்பு கருவிகள் மற்றும் ஆயுத உள்கட்டமைப்புகள் தகர்க்கப்பட்டு விட்டன. 4 மாதங்களில் அவர்களை கற்காலத்திற்கு கொண்டு வந்து விட்டோம். தற்போது அவர்களிடம் மிகச்சில ஏவுகணைகளே உள்ளன என்று கூறினார். ஈரானுக்கு எதிரான தாக்குதலை அமெரிக்கா தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில், அமெரிக்க ராணுவம் இன்று காலை வெளியிட்ட செய்தியில், ஈரானை நோக்கி நடத்திய மற்றொரு சுற்று தாக்குதல் நிறைவடைந்து உள்ளது என தெரிவித்து உள்ளது. ஏவுகணை தளங்கள் இந்த தாக்குதல் 7 மணிநேரம் நடந்துள்ளது. ஏவுகணை மற்றும் டிரோன் தளங்களை இலக்காக கொண்டும், ஈரானின் கடலோர பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் கடற்படை அமைப்புகளை இலக்காக கொண்டும் இந்த தாக்குதல் நடந்துள்ளது என்று தெரிவித்து உள்ளது. எனினும், இதனால் ஏற்பட்ட பாதிப்பு அல்லது உயிரிழப்பு தொடர்பான விவரங்களை ஈரான் உடனடியாக பகிரவில்லை. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/world/us-launches-severe-attack-on-iran-for-7-hours




