சென்னை, என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் கேள்வி எழுப்பி உள்ளார். இது தொடர்பாக, வேல்முருகன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- பாலியல் வன்கொடுமை மதுராந்தகம் அருகே கொங்கரை பகுதியில், ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாற்றுத்திறனாளி சிறுமி வீட்டில் இருந்தபோது பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக வெளியாகியுள்ள செய்தி மிகுந்த வேதனையும் அதிர்ச்சியும் அளிக்கிறது. சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், சம்பவம் தொடர்பாக காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மதுராந்தகம் தொகுதியில் தேர்தல் பிரசாரங்கள் நடைபெற்று வரும் நிலையில், காவல்துறையினர் பல்வேறு பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இத்தகைய சூழலிலும் ஒரு மாற்றுத்திறனாளி சிறுமி தனது வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்க முடியாத நிலை ஏற்பட்டதாகச் செய்தி வெளியாகியிருப்பது, சட்டம் ஒழுங்கு மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து மிகப்பெரிய கேள்வியை எழுப்புகிறது. பாதுகாப்பு நடவடிக்கை இதற்கு முன்பாக, வண்டலூர் அருகே கண்டிகையில் உள்ள அரசுப் பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவி தொடர்பாக பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு எழுந்தது. அந்த வழக்கில் காவல்துறை விசாரணை நடைபெற்று வருகிறது. தொடர்ச்சியாக குழந்தைகள் தொடர்பான இதுபோன்ற செய்திகள் வெளியாகும் நிலையில், குற்றம் நிகழ்ந்த பின்னர் நடவடிக்கை எடுப்பதைத் தாண்டி, அவற்றை முன்கூட்டியே தடுப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் எங்கே? குழந்தைகளின் பாதுகாப்பு என்பது அரசின் முதன்மைக் கடமை. பாதிக்கப்பட்ட சிறுமியின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதுடன், இந்தச் சம்பவத்தின் உண்மை நிலையை விரைந்து கண்டறிந்து, குற்றத்தில் தொடர்புடைய அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதில் அலட்சியம் காட்டப்படுவதை வன்மையாகக் கண்டிக்கிறேன். வலியுறுத்தல் இனிவரும் காலங்களில் இதுபோன்ற கொடூரச் சம்பவங்கள் நிகழாமல் தடுக்கும் வகையில், காவல்துறை கண்காணிப்பையும் குழந்தைகள் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு உடனடியாக வலுப்படுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு முழுமையான மருத்துவம், பாதுகாப்பு மற்றும் உரிய நீதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/government-should-focus-on-child-safety-velmurugan




