விருதுநகர், விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- சட்டமன்றத்துக்கு புதிய உறுப்பினர்கள் வந்து இருக்கிறார்கள். அவர்களுக்கு போதிய அனுபவம் இல்லை. சில மாதங் களில் அவர்களுக்கு தேவையான அனுபவம் கிடைத்துவிடும். எனவே தற்போது சட்டமன்றத்தில் நடைபெறும் சம்பவங்களை நகைச்சுவையாக பார்க்கக்கூடாது. ஒவ்வொரு கட்சியில் உள்ள தொண்டர்கள் அவர்களது தலை வரை ஜனாதிபதியாக, பிரதமராக, முதல்-அமைச்சராக கற்பனை செய்து பார்ப்பது வழக்கம். அதனை யாரும் தடுக்க முடியாது. அதேபோலதான் விஜய் ரசிகர்கள் தங்களது தலைவரை பிரதமராக கற்பனை செய்து பார்க்கிறார்கள். பிரதமர் மோடி வலுவான ஒரு தலைவராக இருக்கிறார். அவரை எதிர்கொள்ளக் கூடிய துணிச்சல் யாருக்கும் இல்லை. காங்கிரஸ்-தவெக கூட்டணி எந்த நேரத்திலும் முறியலாம். எப்போது வேண்டும் என்றாலும் இந்த ஆட்சிக்கு ஆபத்து வரலாம். இதனை உணர்ந்து அவர்கள் செயல்பட வேண்டும். ஜெயலலிதா ஆட்சி காலத்தில் புதிய சட்டமன்றம் கட்ட முடிவு செய்யப் பட்டது. அதற்கு தி.மு.க. முட்டுக்கட்டை போட்டது. த.வெ.க. ஆட்சியில் புதிய சட்டமன்றம் அமைந்தால் மகிழ்ச்சி. இவ்வாறு அவர் கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/tvk-congress-alliance-could-collapse-at-any-moment-rajendra-balaji-predicts




