ஸ்ரீநகர், ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் இமயமலையில் இந்து மதக்கடவுள் சிவபெருமானின் அமர்நாத் குகைக்கோவில் அமைந்துள்ளது. ஸ்ரீநகரில் இருந்து 141 கிலோ மீட்டர் தொலைவில் அனந்தாக் மாவட்டத்தின் பஹல்காமில் இந்த கோவில் அமைந்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 3 ஆயிரத்து 888 மீட்டர் உயரத்தில் அமர்நாத் குகைக்கோவில் அமைந்துள்ளது. அமர்நாத் யாத்திரை இந்த குகைக்கோவிலில் இயற்கையாக தோன்றும் பனிலிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டும் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. அந்த வகையில் நடப்பு ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை கடந்த 3ம் தேதி தொடங்கியுள்ளது. அடுத்த மாதம் 28ம் தேதி வரை 57 நாட்கள் யாத்திரை நடைபெற உள்ளது. 1.13 லட்சம் பேர் இந்நிலையில், அமர்நாத் யாத்திரை கடந்த 3ம் தேதி தொடங்கிய நிலையில் நேற்று வரை (5 நாட்கள்) 1.13 லட்சம் பேர் அமர்நாத் குகைக்கோவில் பனிலிங்கத்தை தனிசனம் செய்துள்ளனர். மொத்தம் 1,13,814 பேர் தரிசனம் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அமர்நாத் யாத்திரையில் 3 லட்சத்து 77 ஆயிரம் பேர் பங்கேற்று பனிலிங்கத்தை தரிசனம் செய்தனர். நடப்பு ஆண்டில் 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அமர்நாத் யாத்திரையில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/india/amarnath-yatra-2026-over-113-laksh-devotees-offer-darshan-tillnow




