சென்னை, தமிழக சட்டசபையின் இன்றைய நிகழ்வுகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் இறந்து மிதந்து தொடர்பாக அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார். இதற்கு பதில் அளித்து சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ராஜீவ் பேசுகையில் "எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் இறந்து மிதந்ததற்கு தொழிற்சாலைக் கழிவுகள் காரணம் அல்ல மனிதக் கழிவுகள் உள்பட கழிவு நீர் கலப்பு காரணமாக உயிரிழந்திருக்கலாம் என தெரியவருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது" என்றார். சிறப்பு திட்ட செயலாக்கத்துறை, நீதி நிர்வாகம், எரிசக்தித் துறை, சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் (உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை), சட்டத்துறை, இந்து சமய அறநிலையத்துறை (வணிக வரிகள், பதிவு மற்றும் அறநிலையங்கள் துறை) ஆகிய துறைகள் மீதான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. இந்த விவாதத்தில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசி முடித்தவுடன் அவர்களுடைய கேள்விகளுக்கு அமைச்சர்கள் நிர்மல்குமார், ரமேஷ் ஆகியோர் பதிலுரை வழங்குவார்கள். நிறைவாக, தங்களுடைய துறை சார்பில் புதிய அறிவிப்புகளை வெளியிடுவார்கள். இதில் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை முதல்-அமைச்சர் விஜய்யிடம் உள்ளது. அவர் அல்லது அவரது சார்பில் அமைச்சர்கள் யாரேனும் அறிவிப்புகளை வெளியிடுவார்கள். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/what-are-the-proceedings-in-the-tamil-nadu-legislative-assembly-today



