சென்னை, சென்னை அண்ணா அறிவாலயத்தில் முன்னாள் வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- வேளாண் பட்ஜெட்டில் பல அறிவிப்புகள் வரும் என்று தமிழக விவசாயிகள் பலரும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் எங்கள் பட்ஜெட்டை திரும்ப படித்தது போல் இருந்தது. நான் 6 முறை வேளாண் பட்ஜெட் மீது உரையாற்றியிருக்கிறேன். இன்று சட்டமன்றத்தில் உட்கார்ந்திருக்கும்போது 7-வது முறையாக படிக்கிறோமோ என்ற எண்ணம் வந்தது. மாற்றம் என்று சொல்லி வந்தவர்கள் அளித்த பட்ஜெட்டில் மாற்றம் இல்லை. புதிய அறிவிப்புகள் ஏதாவது வரும் என்று பார்த்தால் ஒன்றும் இல்லை. நாங்கள் தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் உள்ள அறிவிப்புகள் வரி பிசகாமல் அப்படியே உள்ளன. திமுக ஆட்சியில் அறிவித்த அனைத்தும் தவெக அரசின் வேளாண் பட்ஜெட்டில் பெயர் மாற்றம் செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. வேளாண் கருவிகளை மானிய விலையில் வழங்க திட்டமிட்டு இருந்தோம்; அதை அப்படியே அறிவித்து விட்டனர். 2 லட்சம் விசாயிகளுக்கு புதிய மின் இணைப்பு வழங்கும் திட்டம் இந்த பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. மானாவாரி நில விவசாயிகளுக்கு மானியம் வழங்கும் திட்டம் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/agriculture-budget-not-change-but-deception-former-minister-mrk-panneerselvam




