சென்னை, விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தத் தவறியது யார் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக, தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- தமிழ்நாட்டில் சமையல் எண்ணெய், தனியா, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்து மக்களின் மாதாந்திர பட்ஜெட்டை நிலைகுலைய வைத்துள்ளது. இது வெறும் அரசியல் குற்றச்சாட்டு அல்ல. மத்திய அரசின் நுகர்வோர் விவகாரத்துறையின் (Price Monitoring Division) அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களே இதை உறுதிப்படுத்துகின்றன. 2024 ஆகஸ்ட் முதல் 2026 ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில், விலை உயர்வு சூரியகாந்தி எண்ணெய் கிலோ ரூ.115.71-லிருந்து ரூ.193.58 ஆக உயர்வு (67.3 சதவீதம்)., மல்லி (தனியா) கிலோ ரூ.23.82-லிருந்து ரூ.46.11 ஆக உயர்வு (93.6 சதவீதம்)., சர்க்கரை கிலோ ரூ.44.28-லிருந்து ரூ.53.58 ஆக உயர்வு (21 சதவீதம்)., அரிசி கிலோ ரூ.55.75-லிருந்து ரூ.60.25 ஆக உயர்வு (8.1 சதவீதம்)., உப்பு விலை 11 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. அதேவேளையில், துவரம் பருப்பு, காய்ந்த மிளகாய், மஞ்சள் போன்ற சில பொருட்களின் விலை குறைந்துள்ளது என்பதையும் மறுப்பதற்கில்லை. நலத்திட்ட உதவிகள் ஆனால், எளிய மக்களுக்கு கையில் நலத்திட்ட உதவிகளை வழங்கிவிட்டு, மறுகையில் கட்டுக்கடங்காத விலைவாசி மூலம் அவர்களின் சேமிப்பைப் பறிக்கும் சூழல் நீடிக்கக்கூடாது. வெளிச்சந்தை விலை உயர்வுக்குக் காரணங்களை அடுக்கித் தட்டிக்கழிக்காமல், இடைத்தரகர்களின் ஆதிக்கம், பதுக்கல் மற்றும் செயற்கைத் தட்டுப்பாடுகளைத் தகர்க்க வேண்டும். ஏற்கனவே உள்ள ‘விலை நிலைப்படுத்தும் நிதியை’ (Price Stabilisation Fund) ஒன்றிய அரசு முறையாகப் பயன்படுத்த வேண்டும். வலியுறுத்தல் அதேபோல் தமிழ்நாடு அரசும் வெளிப்படையான சந்தைத் தலையீடுகளை முன்னெடுத்து, சாமானிய மக்களுக்கு மலிவு விலையில் மளிகைப்பொருட்கள் தடையின்றிக் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/who-failed-to-control-price-increases-velmurugan-question



