சென்னை, தமிழ்நாடு முதல்-அமைச்சர் தலைமையில் இன்று மாநில அளவிலான போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு. இது தொடர்பாக, தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- பிரசிடென்சி கல்லூரி தமிழ்நாடு முதல்-அமைச்சர் சி. ஜோசப் விஜய். சென்னை பிரசிடென்சி கல்லூரி அரங்கில் நடைபெற்ற பிரம்மாண்ட நிகழ்ச்சியில், 73 கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த 2,000 மாணவர்களுக்கு போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழியை ஏற்க செய்தார். போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழி இந்நிகழ்ச்சி யூடியூப் இணைப்பு மூலம் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளிலும் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. இதே நேரத்தில், தமிழ்நாடு முழுவதும் 14.000 பள்ளிகள் மற்றும் 4.900 கல்லூரிகளை சேர்ந்த 1 கோடிக்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்களது கல்வி நிறுவனங்களில் போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழியை ஏற்றனர். தமிழ்நாடு முதல்-அமைச்சர் 'போதைப்பொருள் மற்றும் புகையிலை இல்லா வளாகம்' என்ற முன்னெடுப்பையும் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு: அறிமுக பயிற்சி i) அனைத்து புதிய மாணவர்களுக்கும் போதைப்பொருள் பயன்பாட்டினால் ஏற்படும் அபாயங்கள். என்.டி.பி.எஸ். சட்டத்தின் கீழ் விதிக்கப்படும் தண்டனைகள். கல்வி நிறுவனங்களின் ஒழுங்கு நடவடிக்கைகள் மற்றும் ஆலோசனை அளிப்பது குறித்த அறிமுக பயிற்சி வழங்கப்படும். மேலும். போதைப்பொருளை பயன்படுத்துவதில்லை என உறுதியளிக்கும் தன்னார்வ உறுதிமொழிப் பத்திரத்திலும் அவர்கள் கையெழுத்திடுவார்கள். போதைப்பொருள் எதிர்ப்பு மன்றம் ii) கல்வி நிறுவனங்கள் ஆண்டுதோறும் உறுதிமொழி ஏற்பு. தெருக்கூத்து. பல்வேறு போட்டிகள், பேரணிகள் மற்றும் போதைப்பொருள் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையங்களுக்கு நேரில் சென்று பார்வையிடுதல் போன்ற போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகளை, போதைப்பொருள் எதிர்ப்பு மன்றம் கையேட்டின்படி ஏற்பாடு செய்யும். சக மாணவர் தூதர்கள் iii) போதைப்பொருள் எதிர்ப்பு மன்றங்கள் அதன் உறுப்பினர்களுக்கு பயிற்சி வழங்குவதன் மூலம் வலுப்படுத்தப்படும். மேலும், மாணவர்களிடையே ஏற்படும் ஆரம்பகட்ட நடத்தை மாற்றங்களை கண்டறிந்து, சக மாணவர் மட்டத்தில் ஆதரவு வழங்குவதற்காக சக மாணவர் தூதர்கள் நியமிக்கப்படுவார்கள். சுயாதீன ஆலோசகர் உதவி iv) கல்வி நிறுவனங்கள் ஆண்டுதோறும் மாணவர்களின் உடல்நலம் மற்றும் உளவியல் நிலை தொடர்பான மதிப்பீடுகளை மேற்கொள்ளும். போதைப்பொருள் பயன்பாட்டின் ஆரம்ப அறிகுறிகள் காணப்படும் மாணவர்களுக்கு ரகசியமான, பாதிப்பில்லாத பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, சுயாதீன ஆலோசகர்களின் உதவியும் வழங்கப்படும். புகையிலை இல்லா மண்டலங்கள் v) கல்வி நிறுவனங்களின் வளாகங்களைச் சுற்றி 100 மீட்டர் வரையிலான பகுதிகள் "புகையிலை இல்லா மண்டலங்கள்" எனக் குறிக்கப்படும். காவல்துறை. உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்கள் மற்றும் போதைப்பொருள் எதிர்ப்பு மன்றங்கள் இணைந்து கடைகளில் ஆய்வு மேற்கொண்டு, புகையிலை பொருட்களை விற்பனை செய்வதைத் தவிர்க்குமாறு விற்பனையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவார்கள். சிசிடிவி கேமரா vi) அனைத்து கல்வி நிறுவனங்களின் வளாகங்களுக்குள்ளும் அவற்றை சுற்றியுள்ள பகுதிகளிலும் போதுமான எண்ணிக்கையில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும். போதைப்பொருள் இல்லாத TN செயலி vii) போதைப்பொருள் கடத்தல் தொடர்பான புகார்களுக்கு விரைந்து நடவடிக்கை எடுப்பதற்காக, காவல்துறை தொடர்பு அலுவலர்கள் கல்வி நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுவார்கள். மேலும், மாணவர்கள் போதைப்பொருள் பயன்பாடு தொடர்பான தகவல்களை போதைப்பொருள் இல்லாத TN செயலி மூலம் தெரிவிக்க ஊக்குவிக்கப்படுவார்கள். போதைப்பொருள் இல்லா வளாகம் viii) தேவையான அனைத்து போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கைகளையும் செயல்படுத்த கல்வி நிறுவனங்கள் தீவிரமாக ஊக்குவிக்கப்படுவதுடன். தங்களை அதிகாரப்பூர்வமாக "போதைப்பொருள் இல்லா வளாகம்" என அறிவிக்கவும் ஊக்குவிக்கப்படும். 1 லட்சம் கிலோ கஞ்சா இந்நிகழ்வின்போது. செங்கல்பட்டு, தஞ்சாவூர், கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி ஆகிய நான்கு இடங்களில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் அழிக்கப்பட்டதையும் முதல்-அமைச்சர் காணொலி வாயிலாக பார்வையிட்டார். மொத்தம் 1 லட்சம் கிலோ கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் அழிக்கப்பட்டன. முதல்-அமைச்சரின் காவல் பதக்கம் நடப்பு 2026 ஆம் ஆண்டில் மாநிலத்தில் போதைப்பொருள் உற்பத்தி மற்றும் சட்டவிரோத கடத்தலை தடுப்பதில் சிறப்பான பங்களிப்பை வழங்கிய 15 காவல்துறை அதிகாரிகள் / பணியாளர்களுக்கு. அவர்களின் சிறப்பான பணியை பாராட்டும் வகையில் 'தமிழ்நாடு முதல்-அமைச்சரின் காவல் பதக்கம்' முதல்-அமைச்சரால் வழங்கப்பட்டது. விருதுகளை வழங்கினார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் சிறப்பாக செயல்பட்ட மாநில அளவிலான சிறந்த போதைப்பொருள் எதிர்ப்பு மன்றங்கள் மற்றும் தன்னார்வ குழுக்களுக்கு முதல்-அமைச்சர் விருதுகளை வழங்கினார். முதல் பரிசாக ரூ. 1,00,000, இரண்டாம் பரிசாக ரூ. 75,000, மூன்றாம் பரிசாக ரூ. 50,000 மற்றும் கோப்பைகள். சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. முதல் பரிசு போதைப்பொருள் இல்லாத சமூகத்தை உருவாக்குவதில் அவர்களின் சிறப்பான அர்ப்பணிப்பை அங்கீகரிக்கும் வகையில் இவ்விருதுகள் வழங்கப்பட்டன. பள்ளிகளில் சிறந்த போதைப்பொருள் எதிர்ப்பு மன்றத்திற்கான முதல் பரிசை ஈரோடு மாவட்டம் செங்கோட்டம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி பெற்றது. கல்லூரிகளில் திருப்பூர் சிக்கண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல் பரிசை பெற்றது. அதேபோல், பள்ளிகளில் சிறந்த தன்னார்வ குழுவிற்கான முதல் பரிசை நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி பெற்றது. கல்லூரிகளில் ஈரோடு நஞ்சனாபுரம் கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல் பரிசை பெற்றது. 10,040 வழக்குகள் பதிவு மாநிலத்தில் போதைப்பொருட்களின் விநியோகத்தை தடுக்கும் வகையில், மாநிலம் முழுவதும் தீவிரமான சட்ட அமலாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நடப்பு ஆண்டில் 10.08.2026 வரை. மொத்தம் 10,040 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு. 14,400 குற்றஞ்சாட்டப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 17,500 கிலோ உலர் கஞ்சா, 8.9 லட்சம் மாத்திரைகள் மற்றும் கஞ்சா சாக்லேட்டுகள். மெத்தாம்பெட்டமைன், ஆம்பெட்டமைன். மெத்தாகுவாலோன் உள்ளிட்ட 200 கிலோ பிற போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. 13,150 வழக்குகள் பதிவு இதேபோல், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தது தொடர்பாக மொத்தம் 13,150 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 1.61 லட்சம் கிலோ புகையிலைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும், ரூ. 8.3 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டதுடன், 2,744 வணிக நிறுவனங்கள் / வளாகங்கள் சீல் வைக்கப்பட்டுள்ளன. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் மு. சாய் குமார். ஐஏஎஸ், உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையின் கூடுதல் தலைமை செயலாளர் டாக்டர் கே. மணிவாசன், ஐஏஎஸ், தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் மற்றும் காவல்படைத்தலைவர் மகேஷ் குமார் அகர்வால், ஐபிஎஸ். அமலாக்கப் பிரிவு சிஐடி கூடுதல் காவல்துறை தலைமை இயக்குநர் கே. சங்கர், ஐபிஎஸ், சென்னை காவல்துறை ஆணையர் ஏ. அமல்ராஜ், ஐபிஎஸ். சென்னை மாவட்ட ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன்.ஐஏஎஸ் மற்றும் மூத்த அரசு மற்றும் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். பூஜ்ஜிய சகிப்புத்தன்மை போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிராக 'பூஜ்ஜிய சகிப்புத்தன்மை' கொள்கையை செயல்படுத்துவதில் தமிழ்நாடு அரசு தனது அசைக்க முடியாத உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகிறது. மேலும், போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிரான போராட்டத்தில் இளைஞர்களும் பொதுமக்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என தமிழ்நாடு அரசு அழைப்பு விடுக்கிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-chief-minister-leads-students-anti-drug-pledge




