சென்னை, தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது; ”ஓமனில் பணி விசா பெற்றுத் தருவதாக ஏமாற்றப்பட்டு, கடந்த பிப்ரவரி முதல் தவித்து வரும் தமிழகத்தைச் சேர்ந்த 5 மீனவர்களான சிரில் ராபின் ஜார்ஜ் (47 | கன்னியாகுமரி), அந்தோணி பிச்சை அலெக்ஸ் ரவி (46 | கன்னியாகுமரி), அந்தோணி பிச்சை சரோன் ஜோசவா (22 | கன்னியாகுமரி), தாமஸ் அருள் (51 | கன்னியாகுமரி) மற்றும் மாரியப்பன் ஜெட்லி (29 | ராமநாதபுரம்) ஆகியோரை உடனடியாகப் பாதுகாப்பாக மீட்கக் கோரி வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளேன். மஸ்கட்டில் உள்ள இந்திய தூதரகம் உடனடியாகத் தலையிட்டு, நமது மீனவர்களுக்குத் தேவையான சட்ட மற்றும் தூதரக உதவிகளை வழங்கி, அவர்களைப் பாதுகாப்பாகத் தாயகம் அழைத்து வர விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மீனவர்களை ஏமாற்றிய போலி ஏஜென்ட் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-fishermen-stranded-in-oman-need-action-to-rescue-them-manickam-tagore




