சேலம், சேலம் கிச்சிப்பாளையத்தில் நண்பருடன் குடும்பம் நடத்திய பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் கிச்சிப்பாளையம் வேல்முருகன் நகரை சேர்ந்தவர் ஆறுமுகம். இவருடைய மனைவி காயத்ரி (வயது 35). கல்லீரல் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட ஆறுமுகம் கடந்த 14 ஆண்டுக்கு முன்பு இறந்துவிட்டார். கணவரின் சிகிச்சைக்காக காயத்ரி சிலரிடம் ரூ.10 லட்சம் வரை கடன் வாங்கி இருந்ததாக கூறப்படுகிறது. கணவர் இறந்த பின்னர் தனது பள்ளி நண்பரான ராஜவேல் (36) என்பவருடன் காயத்ரிக்கு பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் காயத்ரிக்கு தனியாக வீடு வாடகைக்கு எடுத்து கொடுத்து அவருடன் குடும்பம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் ராஜவேலுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி மனைவி, குழந்தைகள் உள்ளனர். தற்கொலை இந்நிலையில் நேற்று முன்தினம் ராஜவேல், காயத்ரி இடையே திடீரென தகராறு ஏற்பட்டது. பின்னர் சிறிது நேரத்தில் அவர்கள் இருவரும் சமாதானம் அடைந்தனர். இதையடுத்து கடைக்கு சென்று பிரியாணி வாங்கி வருமாறு ராஜவேலிடம் கூறினார். பின்னர் ராஜவேல் வெளியில் கடைக்கு சென்று பிரியாணி வாங்கிவிட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்தபோது, காயத்ரி தூக்குப் போட்டு தற்கொலை செய்திருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். போலீஸ் விசாரணை இது குறித்து தகவல் அறிந்த கிச்சிப்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயத்ரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ராஜவேல், காயத்ரி ஆகியோருக்கு இடையே என்ன பிரச்சினை ஏற்பட்டது? அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து கிச்சிப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பால்ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/woman-commits-suicide-after-husbands-death-marries-friend




