பிரஜ்ஜாவில்லே காங்கோவில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு எபோலா பாதிப்பு உறுதியாகி உள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான காங்கோவில் வரலாறு காணாத வகையில் எபோலா பாதிப்பு பரவல் அதிகரித்து காணப்படுகிறது. கடந்த மே மாத மத்தியில் பரவ தொடங்கி, கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு பலி எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. 2014-2016 ஆண்டுகளில் கினியா, லைபீரியா மற்றும் சியர்ரா லியோன் நாடுகளில், மேற்கு ஆப்பிரிக்க எபோலா பரவலின்போது, 28,600 பேர் பாதிக்கப்பட்டனர். இதனால் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இதனை தொடர்ந்து, ஏற்பட்ட 2-வது கொடிய பரவலாக தற்போது காணப்படும் வைரசின் பரவல் உள்ளது. 8,300 பேருக்கு பாதிப்பு 7 மாகாணங்களில் பரவி 8,300 பேருக்கு பாதிப்பு உறுதியாகி உள்ளது. 4,018 பேர் உயிரிழந்து உள்ளனர் என்று அரசு தகவல் உறுதி செய்யப்பட்டு உள்ளது. 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் குணமடைந்து உள்ளனர். தொடர்ந்து கிழக்கு காங்கோவில் விரைவாக பரவி வருகிறது. உலகிலேயே மிக கொடிய வைரஸ் நோய்களில் ஒன்றான இது உடலின் உட்புற உறுப்புகளில் கடுமையான ரத்தப்போக்கு, உறுப்பு செயலிழப்பு மற்றும் மரணம் ஆகியவற்றை ஏற்படுத்த கூடும். காங்கோவின் அண்டை நாடுகளான உகாண்டா, தெற்கு சூடான் போன்ற நாடுகளுக்கும் எபோலா வைரஸ் பரவியிருக்கும் என அஞ்சப்படுகிறது. இதனை முன்னிட்டு, உலக சுகாதார அமைப்பு சார்பில், உலக சுகாதார அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டு உள்ளது. இந்த பரவலுக்கு காரணம் பண்டிபக்யோ என்ற வைரஸ் என கண்டறியப்பட்டு உள்ளது. இந்த வைரசுக்கு நோய் தடுப்பு மருந்துகளோ அல்லது தடுப்பூசிகளோ எதுவும் இல்லை. தொடர்ந்து காங்கோவில் மருத்துவ பரிசோதனைகளும் நடந்து வருகின்றன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/world/congo-ebola-death-toll-rises-to-4018




