காத்மாண்டு, நேபாளத்தின் ரூபந்தேஹி பகுதியில் பெரும் போதைப்பொருள் கும்பல் உலா வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் அங்கு விரைந்த போலீசார், சந்தேகத்திற்கிடமான நபர்களை சூழ்ந்துகொண்டனர். அப்போது போலீசாரை கண்டதும், அந்த கும்பலில் இருந்த ஒரு நபர் திடீரெனத் துப்பாக்கியால் சுடத்தொடங்கினார். இதனால் உஷாரான போலீசாரும் தற்காப்புக்காக பதில் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் உத்தரபிரதேசத்தை சேர்ந்த இக்பால் கான் (வயது 50) என்ற கடத்தல்காரரின் காலில் குண்டு பாய்ந்து சரிந்தார். அவரை மீட்ட போலீசார் லும்பினி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். மேலும் அவருடன் இருந்த ராம் தயாள் சர்மா (34) என்ற இந்தியரையும், நேபாளத்தை சேர்ந்த சராஜுதீனையும் மடக்கிப் பிடித்தனர். அவர்களிடமிருந்து 300 கிராம் ஹெராயின் மற்றும் கைத்துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/world/3-people-including-indians-arrested-for-drug-smuggling-in-nepal




