சென்னை, மாநிலங்களுக்கு வரி இழப்பை ஏற்படுத்தும் கனிம சட்ட திருத்தத்தை திரும்ப பெற வேண்டும் என கனிமொழி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- சட்ட திருத்த மசோதா கனிம வளங்கள் மீது மாநில அரசுகளுக்கு உள்ள செஸ் வரி உள்ளிட்ட நிதி அதிகாரங்களைப் பறிக்கும் வகையில், மக்களவையில் முறையான விவாதங்கள் ஏதுமின்றி மத்திய பாஜக அரசு நிறைவேற்றியுள்ள MMDR சட்டத் திருத்த மசோதா 2026, மாநில உரிமைகள் மீதான நேரடித் தாக்குதலாகும். 2024 ஆம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டில் உறுதி செய்த மாநிலங்களின் கனிம வளங்கள் மீதான வரி விதிக்கும் அதிகாரத்தையே இத்திருத்தச் சட்டம் நீர்த்துப்போகச் செய்வதோடு, சுற்றுச்சூழலுக்கு பேராபத்தை விளைவித்து, மாநிலங்களின் நிதி சுயாட்சியை பறிக்கும் நோக்கத்தோடு அமைந்துள்ளது. மத்திய பாஜக அரசு இச்சட்டத் திருத்தத்தை திரும்ப பெற வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/the-mineral-law-amendment-causing-revenue-loss-to-states-must-be-withdrawn-kanimozhi




