சென்னை, ஆவினுக்கான பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.6 உயர்த்தி முதல்-அமைச்சர் விஜய் உத்தரவிட்டதை அடுத்து தமிழ்நாட்டைச் சேர்ந்த தனியார் பால் நிறுவனங்களும், அண்டை மாநில தனியார் நிறுவனங்களும் தங்களுக்கான பால் கொள்முதல் விலையை உயர்த்தின. இதனால் ஏற்பட்ட நிதி இழப்பை ஈடுசெய்ய தனியார் பால் நிறுவனங்கள் பால் விற்பனை விலையை உயர்த்தியுள்ளன. கடந்த 21-ந்தேதி ஆரோக்யா நிறுவனம் விலையை உயர்த்திய நிலையில், டோட்லா, ஹெரிடேஜ், திருமலா, சீனிவாசா, ஜெர்சி உள்ளிட்ட தனியார் நிறுவனங்களும் நேற்று முதல் பால் விலையை லிட்டருக்கு ரூ.4 வரையிலும், தயிர் விலையை கிலோவுக்கு ரூ.2-ம் உயர்த்தி உள்ளன. இதன்படி அரை லிட்டர் சமன்படுத்தப்பட்ட பால் ரூ.31-லிருந்து ரூ.32 ஆகவும், நிலைப்படுத்தப்பட்ட பால் ரூ.35-லிருந்து ரூ.37 ஆகவும், கொழுப்பு சத்து செறிவூட்டப்பட்ட பால் ரூ.40-லிருந்து ரூ.42 ஆகவும், ஒரு லிட்டர் சமன்படுத்தப்பட்ட பால் ரூ.59-லிருந்து ரூ.61 ஆகவும், நிலைப்படுத்தப்பட்ட பால் ரூ.68-லிருந்து ரூ.70 ஆகவும், கொழுப்பு சத்து செறிவூட்டப்பட்ட பால் ரூ.78-லிருந்து ரூ.81 ஆகவும், அரை கிலோ தயிர் ரூ.41-லிருந்து ரூ.42 ஆகவும், இருமுறை சமன்படுத்தப்பட்ட தயிர் ரூ.36-லிருந்து ரூ.37 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தனியார் நிறுவனங்கள் பால் விலையை 3-வது முறையாக உயர்த்தி உள்ளன. இதன்மூலம் ஒரே ஆண்டில் லிட்டருக்கு ரூ.10 வரை தனியார் பால் பாக்கெட் விலைகள் அதிகரித்து இருக்கிறது. இந்த விற்பனை விலை உயர்வு காரணமாக ஆவினுக்கும், தனியார் பாலுக்குமான விற்பனை விலை வித்தியாசம் சராசரியாக குறைந்தபட்சம் ரூ.14 முதல் அதிகபட்சமாக ரூ.30 வரை ஒரு லிட்டருக்கு விற்பனை விலை வித்தியாசம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏழை, எளிய, நடுத்தர மக்களின் கவனம் ஆவின் மீது திரும்பக் கூடும் என்பதால் தற்போதைய சூழலில் தமிழ்நாடு முழுவதும் ஆவின் பால் தட்டுப்பாடு மேலும் கூடுதலாகும் சூழல் உருவாகியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/impact-of-private-milk-price-hike-aavin-milk-likely-to-face-further-shortages




