புதுடெல்லி, பிரதமர் நரேந்திர மோடியின் ஆலோசனையின் பேரில் மத்திய மந்திரி பதவியில் இருந்து ரவ்னீத் சிங் ராஜினாமா செய்துள்ளார். மத்திய ரெயில்வே இணை மந்திரி ரவ்னீத் சிங் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மத்திய இணை மந்திரி ரவ்னீத் சிங்கின் ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி திரவுபதி முர்மு ஏற்றுக்கொண்டார். பிரதமர் மோடியின் ஆலோசனையின் பேரில் ரவ்னீத் சிங் ராஜினாமா ஏற்கபட்டதாக ஜனாதிபதி மாளிகை தகவல் தெரிவித்துள்ளது. தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ள நிலையில் ரெயில்வே இணை மந்திரி திடீர் ராஜினாமா செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 47 பேர் பணி நீக்கம் நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் தேசிய தேர்வு முகமையை சேர்ந்த அதிகாரிகள் 47 பேர் பணி நீக்கம் என தகவல் வெளியாகி உள்ளது. பணிநீக்கம் செய்யப்பட்ட 47 பேரில் சிலர் மீது சட்ட மற்றும் குற்றவியல் நடவடிக்கை என டெல்லி வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றது. வினாத்தாள் கசிவு விவகாரத்தை அடுத்து தேசிய தேர்வு முகமையை முழுவதும் சீரமைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலகக்கோரி போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனிடையே கரப்பான் கட்சியினருடன் மாணவர் அமைப்புகள் போராட்டம் நடத்தும் நிலையில் அரசு நடவடிக்கை என தகவல் வெளியாகி உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/india/president-droupadi-murmu-as-advised-by-the-prime-minister-has-accepted-the-resignation-of-ravneet-singh-from-the-union-council-of-ministers-with-immediate-effect



