சென்னை, வார தொடக்கத்தில் இருந்தே ஏற்றம் கண்டு வந்த தங்கம் விலை, இன்று அதிரடியாக சரிவை சந்தித்துள்ளது. தங்கம் விலை தங்கம் விலை கடந்த சில நாட்களுக்கு முன் இறக்கத்தை சந்தித்து வந்த நிலையில், இந்த வார தொடக்கத்தில் இருந்தே ஏற்றத்தை கண்டது. அதன்படி, கடந்த திங்கட்கிழமை ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 150-க்கும். பவுன் ரூ.1 லட்சத்து 5 ஆயிரத்து 200-க்கும் விற்பனையானது. செவ்வாயன்று கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.13 ஆயிரத்து 220-க்கும், சவரனுக்கு ரூ.560 அதிகரித்து ரூ.1 லட்சத்து 5 ஆயிரத்து 760-க்கும் விற்பனையானது. நேற்று முன் தினம் சவரனுக்கு ரூ.1,680 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,07,440-க்கும், கிராமுக்கு ரூ.210 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,430-க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,08,000-க்கும், கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,500-க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இன்றைய தங்கம் விலை இவ்வாறு வார தொடக்கத்தில் இருந்தே ஏற்றம் கண்டு வந்த தங்கம் விலை, இன்று அதிரடியாக சரிவை சந்தித்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,160 குறைந்து ஒரு சவரன் ரூ.1,05,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.270 குறைந்து ஒரு கிராம் ரூ.13,230-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி் விலை வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது. அதன்படி, வெள்ளி கிராமுக்கு ரூ.5 குறைந்து, ஒரு கிராம் ரூ.240-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/business/gold-rate-chennai/gold-prices-drop-sharply-what-is-the-situation-today




