‘ஜெயிலர் 2’ படத்தில் எஸ்.ஜே.சூர்யா கதாபாத்திர அறிமுக வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்தில் போதி என்ற கதாபாத்திரத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ளார். மீண்டும் இணைந்த ரஜினி – நெல்சன் கூட்டணி நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2023-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘ஜெயிலர்’. ரம்யா கிருஷ்ணன், மிர்ணா, விநாயகன், வசந்த் ரவி உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. அனிருத் இசையமைத்திருந்தார். ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இப்படம், உலகளவில் ரூ.600 கோடிக்கும் மேல் வசூலித்ததாக கூறப்பட்டது. ‘ஜெயிலர் 2’ படத்திற்கு அதிகரிக்கும் எதிர்பார்ப்பு ஜெயிலர்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது அதன் இரண்டாம் பாகமான ‘ஜெயிலர் 2’ திரைப்படம் உருவாகி வருகிறது. மீண்டும் ரஜினிகாந்த் - நெல்சன் திலீப்குமார் கூட்டணி இணைந்துள்ளதால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. முதல் பாகத்தைப் போலவே இரண்டாம் பாகத்திலும் மோகன்லால், சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கேமியோ கதாபாத்திரங்களில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ரம்யா கிருஷ்ணன், பாலிவுட் நடிகர் மிதுன் சக்கரவர்த்தி, சந்தானம், சுராஜ் வெஞ்சரமூடு, யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். வரவேற்பை பெற்ற பர்ஸ்ட் சிங்கிள் இப்படம் ரூ.350 கோடி வரையிலான பட்ஜெட்டில் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. வருகிற அக்டோபர் மாதம் 15-ம் தேதி உலகளவில் வெளியாகவுள்ளது. இதற்கிடையில், இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான ‘அல்ல போலேலோ’ பாடல் சமீபத்தில் வெளியானது. இந்தப் பாடலில் நடிகை பூர்ணா சிறப்பு நடனம் ஆடியிருந்தார் ‘ஜெயிலர்’ முதல் பாகத்தில் ‘காவாலா’ பாடலைப் போல ‘அல்ல போலேலோ’ பாடலும் ரசிகர்களிடம் சிறப்பான வரவேற்பைப் பெற்று வைரலானது. கதாபாத்திர அறிமுக வீடியோ வெளியீடு இந்த நிலையில், ‘ஜெயிலர் 2’ படத்தில் எஸ்.ஜே.சூர்யா கதாபாத்திர அறிமுக வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்தில் போதி என்ற கதாபாத்திரத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ளார். இப்படத்தில் சுராஜ் வெஞ்சரமூடு கதாபாத்திர அறிமுக வீடியோவை படக்குழு நேற்று வெளியிட்டிருந்தது. இப்படத்தில் திலீப் என்ற கதாபாத்திரத்தில் சுராஜ் வெஞ்சரமூடு நடித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/cinema/cinemanews/sj-suryas-character-introduction-video-in-jailer-2




