மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் எய்ம்ஸ் மருத்துவமனையில் காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி என்ன? என்பது பற்றிய விவரங்கள் பின்வருமாறு பணி நிறுவனம்: அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனங்கள் (எய்ம்ஸ்) காலி பணி இடங்கள்: 2,218 பதவி: நர்சிங் ஆபீசர் கல்வி தகுதி: பி.எஸ்சி. நர்சிங், போஸ்ட் பேசிக் பி.எஸ்சி. நர்சிங் அல்லது ஜெனரல் நர்சிங் அண்ட் மிட்வைபரி (ஜி.என்.எம்.) டிப்ளமோ. இந்திய நர் சிங் கவுன்சில் அல்லது மாநில நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும். ஜி.என்.எம். டிப்ளமோ படித்தவர்கள் குறைந்தபட்சம் 50 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையில் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். வயது: 13-8-2026 அன்றைய தேதிப்படி குறைந்தபட்ச வயது 18; அதிக பட்ச வயது 30. அரசு விதிமுறைகளின்படி 3 முதல் 5 ஆண்டுகள் வரை வயது தளர்வு உண்டு. மாற்றுத்திறனாளிகளுக்கு 10 முதல் 15 ஆண்டு கள் வரை வயது தளர்வு அனுமதிக்கப்படும். தேர்வு முறை: முதல் நிலைத்தேர்வு, மெயின் தேர்வு. முதல் நிலைத்தேர்வு நடைபெறும் தேதி: 12-9-2026 மெயின் தேர்வு நடைபெறும் தேதி: 30-9-2026 விண்ணப்பிக்க கடைசி தேதி: 13-8-2026 கூடுதல் விவரங்களுக்கு: முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/education-and-employment/jobs-at-aiims-hospital-2218-vacancies-how-to-apply




