தூத்துக்குடி, தூத்துக்குடி மாவட்டம், கட்டாலங்குளத்தில் இன்று அழகுமுத்துக்கோன் 269-வது குருபூஜை விழா நடைபெறுவதை முன்னிட்டு, அங்கே வருகை தரும் வாகன ஓட்டிகள் வீலிங், அதி வேகமாக வாகனங்களை இயக்கினால் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று அழகுமுத்துக்கோன் 269-வது குருபூஜை விழா அழகுமுத்துக்கோன் 269-வது குருபூஜை விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தூத்துக்குடி மாவட்டம், கட்டாலங்குளத்தில் இன்று (11.7.2026, சனிக்கிழமை) நடைபெறவுள்ள மாவீரன் அழகுமுத்துக்கோன் 269-வது குருபூஜை விழாவில் பங்கேற்க பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வருகை தர உள்ளனர். வீலிங், அதி வேகமாக வாகனங்களை இயக்கினால் நடவடிக்கை பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளை குருபூஜையில் பங்கேற்க வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் வீலிங் (Wheeling), பந்தய வேகத்தில் வாகனம் ஓட்டுதல் (Rash Racing) மற்றும் பொதுமக்களின் உயிருக்கும், உடைமைகளுக்கும் ஆபத்து ஏற்படுத்தக்கூடிய பிற சாகசச் செயல்களில் ஈடுபடக் கூடாது என்று அறிவுறுத்தியுள்ளது. மேலும், நீதிமன்றத்தின் உத்தரவின்படி, இத்தகைய ஆபத்தான செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது மோட்டார் வாகனச் சட்டம் மற்றும் பிற பொருந்தக்கூடிய சட்டங்களின் கீழ் காவல்துறையினர் உடனடியாக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே குருபூஜையில் பங்கேற்க வரும் அனைவரும் தலைக்கவசம் அணிந்து பாதுகாப்பாக பயணிக்க வேண்டும். போக்குவரத்து விதிகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும். வீலிங், ரேசிங் மற்றும் ஆபத்தான சாகசச் செயல்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும். காவல்துறையினரின் அறிவுரைகள், நீதிமன்ற உத்தரவுகளை கடைப்பிடிக்க அனைவரையும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. இதனை மீறுவோர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் "உங்கள் பாதுகாப்பே எங்கள் முன்னுரிமை. பாதுகாப்பாக வாருங்கள். பாதுகாப்பாக வழிபட்டு. பாதுகாப்பாக வீடு திரும்புங்கள்." இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/azhagumuthukon-guru-puja-festival-police-warn-of-action-against-wheeling-and-speeding-vehicles




