பாக்யராஜின் வீட்டில் 3 இளைஞர்கள் குடியிருக்கிறார்கள். இதில் ஒருவர் மற்ற இருவரை கொடூரமாக கொலைசெய்து, தானும் தற்கொலை செய்து கொள்கிறார். இதற்கு பிறகு அந்த வீட்டில் யாரும் குடிவர அச்சப்படும் நிலையில், ஆவி-பேய்கள் பற்றிய நம்பிக்கை இல்லாத அஜய் கார்த்திக் அந்த வீட் டுக்கு குடிவருகிறார். தைரியத்துடன் புது வீட்டுக்கு வரும் அஜய் கார்த்திக், நள்ளிரவில் சில அமானுஷ்ய விஷயங்களை எதிர்கொண்டு அதிர்ந்து போகிறார். இதற்கிடையில் ஒரு இரவில் பாக்யராஜும், அஜய் கார்த்திக்கும் மர்மமான முறையில் இறந்துபோக, வழக்கை விசாரிக்க வருகிறார் போலீஸ் அதிகாரி நட்ராஜ். அப்போது இறந்துபோன அஜய் கார்த்திக் உயிருடன் எழுந்து, நட்ராஜை எச்சரிக்கிறார். தனக்கு அறிமுகம் இல்லாத ஒருவர் தன் பெயரை கூறுகிறாரே. என்று அதிர்ந்து போகும் நட்ராஜ் விசாரணையை துரிதப்படுத்த திடுக்கிடும் உண்மைகள் வெளிச்சத்துக்கு வருகிறது. அவை என்ன? என் பதே திகிலூட்டும் மீதி கதை. அறிமுக நாயகனாக களமிறங்கி இருக்கும் அஜய் கார்த்திக், அச்ச உணர்வுகளை சரியாக வெளிப்படுத்தி 'ஸ்கோர்' செய்திருக்கிறார். அழுத்தமான கதாபாத்திரத்தை அளவான நடிப்பால் கையாண்டு அசத்தியுள்ளார். போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் நட்டி நட்ராஜ், வழக்கம்போல எதார்த்தமான நடிப்பால் கவனிக்க வைத்திருக்கிறார். படத்தின் இறுதியில் அவரது நடிப்பு சிறப்பு. அனுபவ நடிப்பால் அசத்தியுள்ளார் பாக்யராஜ். திரைப்படத்திலும் அவரது மறைவை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அஞ்சனா நேத்ரன், வி.டி.வி.கணேஷ், இந்துமதி மணிகண்டன், சிபி சக்கரவர்த்தி ஆகியோரின் நடிப்பும் ஓகே ரகம். ரவி சக்தியின் கேமரா இருட்டிலும் ஒரு திகில் விளக்கை ஏற்றியுள்ளது. மனு ரமேசின் இசை அச்சம் தருகிறது. மனரீதியான பயத்தை கடத்தும் காட்சிகள் பலம். லாஜிக் மீறல்கள் பலவீனம். முதல் பாதியை விட 2-ம் பாதி இன்னும் விறுவிறுப்பாக இருந்திருக்கலாம். ஒரு வீட்டுக்குள் நடக்கும் கதை என்றாலும், கடைசி வரை பயம் குறை யாத காட்சிகளாக நகர்த்தி, திகில் வைத்தியம் கொடுத்திருக்கிறார் இயக்குனர் கல்யாண் கே.ஜெகன். யூகிக்க முடியாத படத்தின் 'கிளைமேக்ஸ்' புதுமை. டார்க் - படபடப்பு முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/cinema/movie-review/dark-film-cinema-review




