இந்த வார விசேஷங்கள் இந்த வாரத்தின் சிறப்பு ஆன்மிக நிகழ்வுகள், முக்கிய பண்டிகைகள், வழிபாடுகள், சேவைகள், சிறப்பு நிகழ்வுகள் வருமாறு: ஆகஸ்ட் 18-ந் தேதி (செவ்வாய்) * சஷ்டி விரதம். * விருதுநகர் சுவாமி பூத வாகனத்திலும், அம்பாள் அன்ன வாகனத்திலும் பவனி. * சுவாமிமலை முருகப் பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல். * திருவைகுண்டம் கள்ளபிரானுக்கு பால் அபிஷேகம். 19-ந் தேதி (புதன்) * மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் தருமிக்கு பொற்கிழி அருளுதல். * குறுக்குத்துறை முருகப்பெருமான் புறப்பாடு. * திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நர சிம்மருக்கு அலங்கார திருமஞ்சனம். * கீழ்நோக்கு நாள். 20-ந் தேதி (வியாழன்) * திருப்பரங்குன்றம் ஆண்டவர் புறப்பாடு. * சுவாமிமலை முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். * திருப்பதி திருவேங்கடமுடையானுக்கு புஷ்பாங்கி சேவை. * கீழ்நோக்கு நாள். 21-ந் தேதி (வெள்ளி) * வரலட்சுமி விரதம். * நெல்லை கெட்வெல் கனக மகாலட்சுமி வளையல் உற்சவம். * திருத்தணி முருகப்பெருமான் கிளி வாகன சேவை. * சமநோக்கு நாள். 22-ந் தேதி (சனி) * மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் வளையல் விற்ற திருவிளையாடல், இரவு பட்டாபிஷேகம். * மன்னார்குடி ராஜகோபால சுவாமி, காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள், திருமோகூர் காளமேகப் பெருமாள் தலங்களில் அலங்கார திருமஞ்சனம். * திருவைகுண்டம் வைகுண்டபதிக்கு பால் அபிஷேகம். * சமநோக்கு நாள். 23-ந் தேதி (ஞாயிறு) * முகூர்த்த நாள். * சுமார்த்த ஏகாதசி. * திருப்பரங்குன்றம் ஆண்டவரும், திருவாதவூர் மாணிக்க வாசகரும் மதுரை எழுந்தருளல். * நெல்லை குறுக்குத் துறை சுப்பிரமணியர் அதிகாலை உருகுசட்ட சேவை. * கீழ்நோக்கு நாள். 24-ந் தேதி (திங்கள்) * மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் புட்டுக்கு மண் சுமந்தருளிய லீலை. * சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். * கீழ்நோக்கு நாள். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/devotional/aanmigam-this-weeks-special-events-18th-august-2026-to-24th-august-2026




