அர்ஜுன் தாஸ், அதிதி ஷங்கர், சோனா ஒலிக்கல் ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் 'ஒன்ஸ் மோர்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. இப்படத்திற்கு 'ஹ்ருதயம்', 'குஷி', 'ஹாய் நானா' போன்ற படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைத்திருக்கிறார். நம் சினிமா விகடன் சேனலுக்கு அளித்த பேட்டியில், 'ஒன்ஸ் மோர்' திரைப்படப் பயணம், இயக்குநர் ஷங்கரைச் சந்தித்த தருணம் ஆகியவற்றைக் குறித்துப் பகிர்ந்திருக்கிறார். ஒன்ஸ் மோர் படம் நம்மிடையே பேசுகையில், "‘குஷி’, ‘ஹாய் நானா’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் எனக்கு முற்றிலும் மாறுபட்ட, மறக்க முடியாத அனுபவங்களைத் தந்தவை. ‘குஷி’ திரைப்படத்தை முன்னணி தயாரிப்பு நிறுவனமான ‘மைத்ரி மூவி மேக்கர்ஸ்’ தயாரித்தது. தெலுங்கு திரையுலகில் பிரபலமான இயக்குநரான சிவா நிர்வாணா அதை இயக்கியிருந்தார். அவரது முந்தைய படங்களை நான் ஏற்கனவே பார்த்திருந்ததால், அவருடைய டைரக்ஷன் பற்றி எனக்குத் தெரிந்திருந்தது. ஒருநாள் மைத்ரி நிறுவனத்திலிருந்து என்னை அழைத்து, "ஹிஷாம், நாளைக்கு ஹைதராபாத் வர முடியுமா?" என்று கேட்டார்கள். நான் அதற்கு முன்பு ஹைதராபாத் சென்றதே இல்லை. ஆனால், "நாளைக்கு நீங்கள் வந்து கண்டிப்பாக ஒரு பாடலை அமைத்துக் கொடுக்க வேண்டும்" என்றார்கள். எப்படியாவது சிறந்த இசையை உருவாக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் உடனே ஒப்புக்கொண்டேன். அப்படி ஹைதராபாத் சென்று இசையமைத்த பாடல் தான் 'என் ரோஜா நீயே'. அந்தப் பாடலுக்குப் பிறகே அப்படத்திற்கு நான் இசையமைப்பது உறுதி செய்யப்பட்டது. அடுத்து ‘ஹாய் நான்னா’ திரைப்பட வாய்ப்பு எனக்குக் கிடைத்ததும் சுவாரசியமானது. நடிகர் ஃபஹத் ஃபாசில் எனது கசின் பிரதர். அவர்தான் நடிகர் நானி அவர்களிடம் எனது பெயரைப் பரிந்துரைத்தார். அதன் பிறகே ‘ஹ்ருதயம்’ படத்தில் நான் அமைத்த இசையைப் பற்றி நானி சார் அறிந்துகொண்டார். Hesham Abdul Wahab தொடர்ந்து அப்படத்தின் இயக்குநர் கொச்சிக்கு வந்து என்னைச் சந்தித்துப் பேசினார்" என்றவர், "எனக்கு மிகவும் பிடித்த திரைப்படங்களைப் பற்றிக் கூறினால், எப்போதும் ஏ.ஆர்.ரஹ்மான் சாரின் இசையில் உருவான ‘காதலன்’ திரைப்படம்தான் முதலிடத்தில் இருக்கும். இன்றளவும் அப்படத்தின் பாடல்களையும் காட்சிகளையும் பார்க்கும்போதெல்லாம் எனக்குள் மெய்சிலிர்க்கும். அந்தக் காலத்திலேயே பல்வேறு வகையான இசை ஜானர்களை ரஹ்மான் சார் முயற்சித்துப் பார்த்துள்ளார். சமீபத்தில் இயக்குநர் ஷங்கர் சாரை நேரில் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அது உண்மையிலேயே ஒரு மறக்க முடியாத அனுபவம். ‘ஒன்ஸ் மோர்’ திரைப்படத்தில் ஷங்கர் சாரின் மகள் அதிதி நடிக்கிறார் என்ற செய்தி வந்தபோதே எனக்குப் பெரும் ஆர்வம் ஏற்பட்டது. ஆனால், அதைவிட அப்படத்தைப் பார்த்தபோது அதிதி, சோனா ஒலிக்கல் மற்றும் அர்ஜுன் தாஸ் ஆகிய மூவரின் நடிப்பும் என்னை மிகவும் கவர்ந்தது. திரையில் நடிகர்களாக இல்லாமல், அந்தக் கதாபாத்திரங்களாகவே அவர்கள் வாழ்ந்திருந்தார்கள். அப்படத்தைப் பார்த்ததுமே நான் அதிதியின் தீவிர ரசிகனாகிவிட்டேன். அதன்பின் ‘ஒன்ஸ் மோர்’ படத்தின் பாடல்களையும் திரைப்படத்தையும் பார்த்த ஷங்கர் சார், "ஹிஷாம், மிகவும் சிறப்பாகச் செய்திருக்கிறீர்கள்!" என்று வாழ்த்தி மெசேஜ் அனுப்பியிருந்தார். ஏ.ஆர்.ரஹ்மான் - ஷங்கர் சார் கூட்டணியின் இசையைக் கேட்டு வளர்ந்தவன் நான். Hesham Abdul Wahab எனது இசைப் பயணமே அவர்களின் இசையிலிருந்துதான் தொடங்கியது. அப்படிப்பட்ட ஷங்கர் சாரிடமிருந்து வந்த பாராட்டுச் சொல் எனக்குக் கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம். உடனே நான் அவருக்கு நன்றி தெரிவித்து, "சார், உங்கள் திரைப்படங்களின் இசையைக் கேட்டுத்தான் என்னுடைய இசைப் பயணமே தொடங்கியது. உங்களின் இந்த மெசேஜைப் பார்த்ததில் எனக்கு அளவற்ற மகிழ்ச்சி" என்று பதிலளித்தேன். பின்னர் அவருடைய அலுவலகத்திற்குச் சென்று அவரை நேரில் சந்தித்துப் பேசி, புகைப்படமும் எடுத்துக்கொண்டேன். என்னுடைய நீண்ட நாள் கனவு நனவான தருணம் அது!" எனப் பகிர்ந்துகொண்டார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://cinema.vikatan.com/kollywood/hesham-abdul-wahab-interview-once-more-director-shankar



