புதுடெல்லி, தமிழக வெற்றிக்கழகம் கட்சியை அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அக்கட்சிக்கு விசில் சின்னத்தையும் ஒதுக்கியுள்ளது. கடந்த 2024 ஆம் ஆண்டு தவெக கட்சியை விஜய் தொடங்கினார். கட்சி தொடங்கிய இரண்டே ஆண்டுகளில் தவெக 35 சதவீத வாக்குகள் பெற்று ஆட்சியையும் பிடித்தது. சந்தித்த முதல் தேர்தலிலேயே 1.8 கோடி வாக்குகளை பெற்று வியக்க வைத்த தவெக இரண்டே ஆண்டுகளில் மாநில கட்சியாக அங்கீகாரம் பெற்றுள்ளது. 8 சதவீதம் கட்டாயம் தேர்தல் ஆணையத்தின் விதிகளின்படி ஒரு கட்சி மாநில கட்சியாக அங்கீகாரம் பெற குறைந்தபட்சம் 8 சதவீத வாக்குகளை பெறுவது அவசியம். தேசிய கட்சியாக அங்கீகாரம் பெற வேண்டும் என்றால், நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களில் பதிவான மொத்த வாக்குகளில் குறைந்தது 6% வாக்குகளைப் பெற்றிருக்க வேண்டும். இதனுடன் சேர்த்து, ஏதேனும் ஒரு மாநிலம் அல்லது மாநிலங்களில் இருந்து குறைந்தது 4 மக்களவை தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். விசில் சின்னம் உறுதி தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை 6 இல் இருந்து 7-ஆக உயர்ந்துள்ளது. திமுக, அதிமுக, சிபிஐ, விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழர், தேமுதிக ஆகிய 6 கட்சிகள் மாநில அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் ஆகும். அந்த பட்டியலில் த.வெ.கவும் இணைந்துள்ளது. மாநில கட்சியாக அங்கீகாரம் பெற்று இருப்பதால், இந்த இடைத்தேர்தலில் த.வெ.க. வேட்பாளர்களுக்கு விசில் சின்னம் ஒதுக்கப்படுவது உறுதியாகி உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/election-commission-has-recognized-tvk-as-a-state-party




