ஒட்டாவா, கனடாவில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட இந்திய வம்சாவளியினர் உள்பட 19 பேரை கைது செய்த போலீசார் 1.7 டன் போதைப்பொருட்கள் மற்றும் 17 துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர். 'புராஜெக்ட் பே' அமெரிக்க எல்லையிலிருந்து லாரிகள் மூலம் கனடாவிற்குள் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதில் அமெரிக்கா மற்றும் கனடா இடையில் செல்லும் லாரிகளில் கொக்கைன், மெத்தம்பெட்டமைன் மற்றும் ஓப்பியம் போன்ற போதை மருந்துகள் கடத்தப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து கனடா போலீசார் 'புராஜெக்ட் பே' என்ற பெயரில் அதிரடி கூட்டு வேட்டையில் ஈடுபட்டனர். போதைப்பொருள், துப்பாக்கிகள் பறிமுதல்; 19 பேர் கைது ஆண்டாரியாவில் 22 இடங்கள், விண்ட்சர், லசலே, கொரூனா, பிராம்ப்டன், மார்ஹம் மற்றும் கலேடன் உள்ளிட்ட பகுதிகளிலும் நடந்த இந்த சோதனையில் 1.7 டன் போதை மருந்துகள் மற்றும் 17 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் 19 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். இந்திய வம்சாவளியினர் இது தொடர்பாக ககன்தீப் திண்டல், சிம்ரன்ஜித் சிங், கன்வர்பால் குலார், ஜதிந்தர்பால் சிங், ஜஸ்விந்தர் சோஹி, தேஜ்விந்தர் சந்து, ஹர்ஜ்விந்தர் சந்து, தர்மிந்தர் சிங், கன்தீப் தரிவால், மஹப்ரீத் சிங் மற்றும் கரன்தீப் சிங் உள்ளிட்ட பெரும்பாலான இந்திய வம்சாவளியினர் உள்பட 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட போதை மருந்துகளின் மதிப்பு இந்திய மதிப்பில் 1039 கோடி ரூபாய் என மதிப்பிப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/world/drug-trafficking-in-canada-19-people-including-people-of-indian-origin-arrested




