சென்னை, தவெகவை கணிக்கத் தவறிவிட்டோம் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் ஒவ்வொரு மாவட்ட நிர்வாகிகளுடனும் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். அதன்படி இன்று வேலூர் மாவட்ட அதிமுக நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வந்தார். அப்போது அவர் பேசியதாவது:- சட்டமன்றத் தேர்தலில் அதிமுக, திமுக இடையேதான் போட்டி என நினைத்து பிரசாரத்தில் ஈடுபட்டோம். ஆனால் தவெகவை கணிக்கத் தவறிவிட்டோம்.அதன் விளைவாக இன்று ஆட்சியில் இருக்கிறார்கள். சீர்படுத்த வேண்டிய தேவை சினிமா மோகத்தில் இளைஞர்களும், குழந்தைகளும், தங்களது பெற்றோரை வலியுறுத்தி வாக்களிக்க வைத்துள்ளனர். மாவட்டந்தோறும் இளைஞர், இளம்பெண்கள் பாசறையை சீர்படுத்த வேண்டிய தேவை உள்ளது. அதிமுக தந்த திட்டங்களை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். தொடர்ந்து நிர்வாகிகளுடன் ஆலோசிப்பேன் எனவும், மக்களையும் விரைவில் சந்திப்பேன் எனவும் பேசியுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/we-failed-to-predict-the-future-edappadi-palaniswami




