மார்வெல் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் அவெஞ்சர்ஸ் படங்களின் புதிய பாகமான ‘அவெஞ்சர்ஸ் டூம்ஸ்டே’ திரைப்படத்தின் சிறப்பு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ள மார்வெல் சூப்பர் ஹீரோ திரைப்பட வரிசையில் அடுத்ததாக வெளியாகவுள்ள ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ திரைப்படம் மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ரூசோ பிரதர்ஸ் மீண்டும் இணைவு ‘அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார்’ மற்றும் ‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்’ போன்ற மாபெரும் வெற்றிப் படங்களை இயக்கிய ரூசோ பிரதர்ஸ், ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ படத்தையும் இயக்கியுள்ளனர். இந்தப் படத்தில் ராபர்ட் டவுனி ஜூனியர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், ஷூரி, கிறிஸ் எவன்ஸ், ஜேம்ஸ் மார்ஸ்டன், வனேசா கிர்பி, ரெபேக்கா ரோமிஜின் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மார்வெல் காமிக்ஸ் கதைகளின் சூப்பர் வில்லனான ‘டாக்டர் டூம்’ கதாபாத்திரத்தை முதன்மையாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தப் படம் மார்வெல் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. அயர்ன் மேன் கதாபாத்திரத்தில் நடித்து உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை ஈர்த்த நடிகர் ராபர்ட் டவுனி ஜூனியர் இப்படத்தில் ‘டாக்டர் டூம்’ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். டிசம்பர் 18-ல் உலகம் முழுவதும் ரிலீஸ் மார்வெல் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ திரைப்படம், வரும் டிசம்பர் 18-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதற்கான விளம்பர பணிகளை படக்குழு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. Doomsday arrives December 18th. Experience Avengers: Doomsday on bigger, brighter, & more immersive screens. Tickets are now on sale exclusively for Infinity Vision certified theaters: — Marvel Studios (@MarvelStudios) July 20, 2026 அதிரடி டிரெய்லர். ரசிகர்களை கவர்ந்த காட்சிகள் சமீபத்தில் வெளியாகியுள்ள டிரெய்லரில் பிரமாண்டமான ஆக்ஷன் காட்சிகள், நவீன கிராபிக்ஸ் மற்றும் பரபரப்பான காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதனால், சமூக வலைத்தளங்களில் டிரெய்லர் வேகமாக வைரலாகி வருகிறது. மார்வெல் ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பும் மேலும் அதிகரித்துள்ளது. ரசிகர்களுக்கு ஏமாற்றம் அதே நேரத்தில், ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த ஹல்க், டாக்டர் ஸ்ட்ரேஞ்ச், ஸ்பைடர் மேன் உள்ளிட்ட முக்கிய சூப்பர் ஹீரோ கதாபாத்திரங்கள் டிரெய்லரில் இடம்பெறாதது பலருக்கும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், இந்த கதாபாத்திரங்கள் திரைப்படத்தில் முக்கிய திருப்பமாக இடம்பெறக்கூடும் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். ஸ்பெஷல் லுக் வீடியோ வெளியீடு இந்த நிலையில், ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’படத்தின் ஸ்பெஷல் லுக் எனும் சிறப்பு வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த படத்தில், கேப்டன் அமெரிக்காவாக நடிகர் கிறிஸ் எவான்ஸ் மற்றும் தோர் கதாபாத்திரத்தில் நடிகர் கிறிஸ் ஹெம்ஸ்வோர்த் ஆகியோர் நடிப்பது குறிப்பிடத்தக்கது. He used to be different. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/cinema/cinemanews/russo-brothers-avengers-doomsday-film-special-video-out



