தூத்துக்குடி, தூத்துக்குடி- சென்னை தாம்பரம் இடையிலான கோடை கால சிறப்பு ரெயில் மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டு உள்ளதாக, தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. சிறப்பு ரெயில் கோடை விடுமுறையை முன்னிட்டு பயணிகள் கூட்ட நெரிசலை சமாளிக்கும் வகையில் தெற்கு ரெயில்வே சார்பில் சென்னை தாம்பரம் - தூத்துக்குடி இடையே ஒரு சிறப்பு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் திங்கட்கிழமைகளில் இரவு 11.30 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து புறப்பட்டு மறுநாள் மதியம் 12.30 மணிக்கு சென்னைக்கும், செவ்வாய்க்கிழமைகளில் சென்னை தாம்பரத்தில் இருந்து மாலை 3.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.30 மணிக்கு தூத்துக்குடிக்கும் வந்து சேருகிறது. இந்த ரெயில் தூத்துக்குடி மேலூர், கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, கொடைக்கானல் ரோடு, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், பாபநாசம், கும்பகோணம், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், திருப்பாதிரிபுலியூர், பண்ருட்டி, விழுப்புரம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு, தாம்பரம் ஆகிய ஊர்களில் நின்று செல்கிறது. நீட்டிப்பு இந்த சிறப்பு ரெயில் சேவையை மேலும் ஒரு மாதம் நீட்டித்து தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. அதன்படி தூத்துக்குடியில் இருந்து சென்னை தாம்பரத்துக்கு வருகிற 3, 10, 17, 24, 31-ந்தேதிகளிலும், சென்னை தாம்பரத்தில் இருந்து தூத்துக்குடிக்கு வருகிற 4, 11, 18, 25 மற்றும் செப். 1 ஆகிய தேதிகளிலும் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு தற்போது நடந்து வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-tambaram-special-train-extended-by-one-more-month-southern-railway




