டல்லாஸ் உலகக்கோப்பை கால்பந்து தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் பாதியில் எகிப்து முன்னிலையில் உள்ளது. பிபா உலகக்கோப்பை கால்பந்து போட்டி தொடரில் லீக் சுற்று ஆட்டங்கள் முடிந்து 2-வது சுற்று ஆட்டங்கள் (நாக்-அவுட் சுற்றுகள்) பரபரப்பாக நடந்து வருகின்றன. இதில், இரவு 11.30 மணியளவில் நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் ஆஸ்திரேலியா மற்றும் எகிப்து அணிகள் விளையாடின. முதல் பாதி அமெரிக்காவின் டல்லாஸ் மைதானத்தில் நடந்த போட்டியின் முதல் பாதியில் எகிப்து அணியின் எமாம் ஆஷவுர் போட்டி தொடங்கிய 13-வது நிமிடத்தில் ஒரு கோல் போட்டார். இதனால், போட்டியின் முதல் பாதியில் 1-0 என எகிப்து முன்னிலையில் இருந்தது. அதன்பின்னர் கோல் அடிக்கப்படவில்லை. போட்டியின் முதல் பாதியில் எந்த அணிக்கும் மஞ்சள் அட்டை காண்பிக்கப்படவில்லை. 2-வது பாதி போட்டியின் 2-வது பாதியில் எகிப்து அணியின் முகமது ஹானி தனது அணிக்கான பகுதியிலேயே கோல் போட்டார். இதனால், ஆஸ்திரேலிய அணிக்கு ஒரு கோல் கிடைத்தது. போட்டி 1-1 என சமன் அடைந்தது. அதன்பின்னர் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதனை தொடர்ந்து கூடுதலாக அரை மணிநேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதில், 15 நிமிடங்களாக இரண்டு பாதியாக ஆட்டம் நடக்கும். அதிலும் போட்டியில் முடிவு கிடைக்காவிட்டால், பெனால்டி ஷூட்அவுட் முறையில் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் அணி முடிவு செய்யப்படும். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/sports/football/world-cup-football-egypt-leads-in-first-half-against-australia




