சென்னை, பெண்கள் பாதுகாப்பில் அலட்சியம் காட்டும் அரசுக்கு வானதி சீனிவாசன் தனது கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தேசிய பாஜக மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும் திண்மை உண்டாக பெறின் நெஞ்சை பதற வைக்கிறது பெண்ணின் மன உறுதியையும் மாண்பையும் போற்றிய திருக்குறள் நிலத்தில், இன்று பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை செய்திகள் தினமும் வெளிவருவது தமிழகம் தலைகுனிய வேண்டிய அவலம். தாம்பரம், காட்பாடி, காங்கேயம் என ஒரே நாளில் பெண்களுக்கு எதிரான 3 பாலியல் வன்கொடுமை செய்திகள் வெளிவந்துள்ளன. வெளிச்சத்துக்கு வராத குற்றங்கள் எத்தனை இருக்குமோ என்ற எண்ணமே நெஞ்சை பதற வைக்கிறது. சாபக்கேடு எத்தனை கண்டனங்கள் எழுந்தாலும், அரசு பெண்கள் பாதுகாப்பை முன்னிலைப்படுத்தாமல், கட்சி வளர்ச்சியையே குறிக்கோளாக கொண்டு செயல்படுவது தமிழக பெண்களுக்கு நேர்ந்த சாபக்கேடு. ஆட்சி பொறுப்பு ஏற்று 2 மாதங்களிலேயே நிலைமை இவ்வளவு மோசமெனில், மீதமுள்ள ஆண்டுகளை நினைத்தாலே பெண்களின் கண்களில் ரத்தக் கண்ணீர் வருகிறது. பெண்கள் பாதுகாப்பில் அலட்சியம் காட்டும் இந்த அரசின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது. குற்றவாளிகளுக்கு விரைவான, கடுமையான தண்டனை வழங்கி பெண்கள் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/government-negligent-regarding-womens-safety-vanathi-srinivasan-condemns




