விருதுநகர், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் இன்று மாலை ஜீப் சென்றுகொண்டிருந்தது. அந்த ஜீப்பில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் பயணம் செய்தனர். 3 பேர் பலி ஸ்ரீவில்லிபுத்தூர் நத்தம்பட்டி அருகே சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஜீப் சாலை தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஜீப்பில் பயணம் செய்த பெண் உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். எஞ்சிய 6 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் குடும்பத்தினர் கோவிலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியபோது ஜீப் விபத்துக்குள்ளானது தெரியவந்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/jeep-accident-in-virudhunagar-kills-3




