சென்னை, பெண்கள் உயர்ந்தால் மட்டுமே ஒட்டுமொத்த சமூகத்துக்கு பெருமை என்று முதல்-அமைச்சர் விஜய் பேசினார். தொகுதி மறுவரையறைக்கு எதிராக சட்டசபையில் தனித்தீர்மானத்தை முதல்-அமைச்சர் விஜய் ம் கொண்டுவந்தார். தனி தீர்மானத்தை முன்மொழிந்து அவர் பேசியதாவது:- நன்றி, விசுவாசத்துடன் இங்கு நின்று பேசுகிறேன். இன்னைக்கு இந்த விஜய்க்கு கிடைத்திருக்க இந்த இடத்திற்கு காரணமே என்னுடையா அம்மா, பாட்டி, அக்கா, தங்கைகள் தான். வீட்டுப் பெண்கள் சமூகத்தில் உயர்ந்தால் தான் நாட்டிற்கே பெயர். அனைத்து துறைகளிலும் தமிழ்நாட்டுப் பெண்களின் பங்களிப்பு பெரிது. நாட்டின் மக்கள் தொகையில் பாதி பேர் பெண்கள். பெண்களுக்கு சம அந்தஸ்து வழங்கப்பட வேண்டும். 2021 சட்டசபையில் 12 பெண் உறுப்பினர்கள்; இப்போது 23 பெண் உறுப்பினர்கள். சதவீத கணக்குப்படி பேரவையில் பெண் உறுப்பினர்கள் எண்ணிக்கை உயரவில்லை. முன்னோடி மாநிலம் பெண்கள் உயர்ந்தால் மட்டுமே ஒட்டுமொத்த சமூகத்துக்கு பெருமை. பெண்களுக்கு இட ஒதுக்கீடு தருவது சலுகை அல்ல; சமூக நீதி அரசியல் அமைப்பு சார்ந்தது. பெண்களுக்கு அதிகாரம் வழங்குவதில் தமிழக வெற்றிக் கழக அரசு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. உள்ளாட்சி 50 சதவீத இட ஒதுக்கீட்டால் அதிகாரத்தில் பெண்கள் உள்ளனர். தொகுதி மறுவரையறையால் தென் மாநிலங்களுக்கு அநீதி இழைக்கப்படும். தொகுதி மறுவரையறை சட்டம் நிறைவேற்றப்பட்டால் தென் மாநில நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை வெகுவாக குறைய வாய்ப்புள்ளது. தற்போதுள்ள மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 543 தொடர வேண்டும். இந்த அடிப்படையில் தான் 2029 தேர்தலையும் நடைமுறைப்படுத்த வேண்டும். 3-ல் 1 பங்கு தொகுதியை மகளிருக்கு வழங்க வேண்டும். பெண்களுக்கு சம வாய்ப்பு ஒரு பெண் அதிகாரம் பெறும் போது அந்த குடும்பம் உயர்கிறது. ஆயிரக்கணக்கான பெண்கள் அதிகாரத்தை பெறும் போது அந்த நாடே உயரும். ஆகையால் பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை இனியும் தாமதப்படுத்தாமல் மத்திய அரசு நடைமுறைப்படுத்த வேண்டும். நாட்டு மக்கள் தொகையில் பாதி பேர் பெண்கள் தான்; அவர்களுக்கு சம வாய்ப்பு வழங்க வேண்டும். நம் வீட்டு பெண்கள் அரசியலில் முன்னேற இட ஒதுக்கீடு தர வேண்டும். மக்கள் தொகுதி கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுவரையறைக்கு பிறகு தான் பெண்களுக்கான இட ஒதுக்கீடு நடைமுறைக்கு வரும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மகளிருக்கு இட ஒதுக்கீடு சட்டம் நிறைவேற்றம் செய்யப்பட்டாலும், அதை செயல்படுத்துவதில் கால தாமதம் ஆகிறது. மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுவரையறையை காரணம் காட்டி நிறுத்தக் கூடாது. தீர்மானம் தொகுதி மறுவரையறை தொடர்பான அனைத்து கட்சி எம்.பி.க்கள் ஆலோசனைக்கு பிறகு தான் தொகுதி மறுவரையறை தொடர்பாக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றலாம் என முடிவு செய்யப்பட்டது. தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றித் தர வேண்டும். இது ஒரு அரசியல் கட்சியின் தீர்மானம் மட்டும் அல்ல. இவ்வாறு அவர் கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/the-entire-society-gains-pride-only-when-women-rise-chief-minister-vijay




