தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரி மாணவர்களுக்காக ஜி.டி. நாயுடு குழுமமும், தினத்தந்தி குழுமமும் இணைந்து நடத்தும் 'தி நெக்ஸ்ட் ஜி.டி. நாயுடு சேலஞ்ச்' மாநில அளவிலான புத்தாக்கப் போட்டி, இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த ஜூன் மாதம் 2-வது வாரத்தில் இந்தப் போட்டி அறிவிக்கப்பட்டது. ஜூன் 21-ஆம் தேதி வரை பதிவு நடைபெற்று, தமிழகம் முழுவதும் உள்ள 165 பொறியியல் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களிடமிருந்து 779 புத்தாக்கத் திட்டங்கள் (Projects) பெறப்பட்டன.இதில் முதல் கட்டத் தேர்வில் தகுதி பெற்ற 36 அணிகள், ஜூலை 2-ஆம் தேதி கோவையில் உள்ள ஜி.டி. அறிவியல் அருங்காட்சியகத்தில் நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் பங்கேற்றன. சுமார் 9 மணி நேரம் நடைபெற்ற திட்ட விளக்கங்கள் மற்றும் மதிப்பீட்டுக்குப் பிறகு, மூன்று பேர் கொண்ட நடுவர் குழு 12 அணிகளை இறுதிப்போட்டிக்குத் தேர்வு செய்தது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/sirappukatturaigal/special-news/next-gd-naidu-challenge-reaches-its-final-stage-key-event-takes-place-today




