வழக்கமான ஆம்லெட்டை சாப்பிட்டு அலுத்துப்போனவர்களுக்கு, கரண்டி ஆம்லெட் ஒரு சூப்பரான மாற்றாக இருக்கும். முட்டைப் பிரியர்கள் வீட்டிலேயே எளிதாக செய்து சுவைக்கலாம். தேவையான பொருட்கள்: முட்டை - 1, சின்ன வெங்காயம் - ஒரு கைப்பிடி, பச்சை மிளகாய் - 1, கொத்தமல்லி - சிறிதளவு, கறிவேப்பிலை - சிறிதளவு, மஞ்சள் தூள் - சிறிதளவு, மிளகுத்தூள் - சிறிதளவு, எண்ணெய் - தேவையான அளவு, உப்பு - தேவையான அளவு. செய்முறை: முதலில் சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி மற்றும் கறிவேப்பிலையைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். ஒரு கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும். பின்னர் நறுக்கிய சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை, மிளகுத்தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளவும். அடுப்பில் ஒரு குழிக்கரண்டியை வைத்து சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் சூடானதும் அதில் சிறிதளவு முட்டைக் கலவையை ஊற்றவும். ஒரு புறம் நன்றாக வெந்ததும் மெதுவாகத் திருப்பிப் போட்டு மறுபுறமும் வேகவிடவும். இருபுறமும் நன்றாக வெந்ததும் எடுத்து பரிமாறலாம். சுவையான கரண்டி ஆம்லெட் தயார்! ஓட்டல்களில் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக குழிக்கரண்டியில் ஆம்லெட் செய்வதற்கு அதிக நேரம் ஆகும் என்பதால், தற்போது குழிகள் அமைக்கப்பட்ட தோசைக் கற்களிலும் இதுபோன்ற ஆம்லெட்கள் சுடச்சுடத் தயாரிக்கப்படுகின்றன. ஓணம் சத்யா: கேரளாவின் பாரம்பரிய விருந்து! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/ampstories/photo-story/how-to-make-spoon-omelette




