திருச்சி, திருச்சி-ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருச்சி-ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் திருச்சியில் இருந்து ராமேசுவரத்துக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 16849) தினமும் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் திருச்சியில் இருந்து காலை 7.05 மணிக்கு புறப்பட்டு புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை வழியாக ராமேசுவரத்துக்கு பகல் 12.35 மணிக்கு சென்றடை கிறது. மறுமார்க்கத்தில் (வண்டிஎண்: 16850) மதியம் 2.50 மணிக்கு ராமேசுவரத்தில் இருந்து புறப்பட்டு அதே வழியில் திருச்சிக்கு இரவு 8.05 மணிக்கு வந்து சேருகிறது. இந்த ரெயிலில் காலை, மாலை நேரங்களில் நாள்தோறும் அரசு ஊழியர்கள், மாணவர்கள், வியாபாரிகள், பக்தர்கள், சுற்றுலா பயணிகள் என்று ஏராளமானோர் பயணிக்கின்றனர். இந்த ரெயிலில் தினந்தோறும் திருச்சி மற்றும் ராமேசுவரத்தில் இருந்து புறப்படும் போதே கூட்டம் அதிகமாக உள்ளது. மேலும் பண்டிகை நாட்கள் மற்றும் வார இறுதி நாட்களில் கூட்டம் அதிகரித்து நெரிசல் காணப்படுகிறது. இதனால் பயணிகள் தொலை தூரத்துக்கு நின்று கொண்டே பயணிக்க வேண்டி உள்ளது. கூடுதல் பெட்டிகள் இதுகுறித்து ரெயில் பயணிகள் கூறுகையில், "திருச்சி-ராமேசுவரம் ரெயிலில் திருச்சியிலேயே அனைத்து இருக்கைகளும் நிரம்பி விடுவதால் புதுக் கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரையில் ஏறும் பயணிகள் ராமேசுவரம் வரை உட்கார இடமின்றி நின்று கொண்டு பயணிக்க வேண்டியுள்ளது. அதுபோல், ராமேசுவரம் திருச்சி ரெயிலில் ராமேசுவரத்திலேயே அனைத்து இருக்கைகளும் நிரம்பி விடுவதால் ராமநாதபுரம், பரமக்குடி. மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டையில் ஏறும் பயணிகள் திருச்சி வரை அமர இடமின்றி நின்றுகொண்டே செல்ல வேண்டியுள்ளது. எனவே, பயணிகள் நலன் கருதி இந்த ரெயிலில் கூடுதல் பெட்டிகளை இணைக்க ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/request-to-attach-additional-coaches-to-the-trichy-rameswaram-express-train




