யாஷ் நடிப்பில் உருவான ‘டாக்ஸிக்’ திரைப்படத்தின் புதிய வீடியோ பாடலை வெளியிட்டுள்ளனர். நடிகர் யாஷ், பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான கே.ஜி.எப் 1, கே.ஜி.எப் 2 உள்ளிட்ட படங்களின் மூலம் இந்திய அளவில் பிரபலமானவர். இந்த படம் வெளியாகி அனைத்து ரசிகர்களையும் கவர்ந்து வசூலையும் வாரி குவித்தது. இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி வசூலை வாரி குவித்தது. இதையடுத்து நடிகர் யாஷ்-க்கு கர்நாடகா மட்டுமின்றி இந்தியா முழுவதும் ரசிகர் பட்டாளம் உருவானது. இதையடுத்து, யாஷ் தற்போது கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘டாக்ஸிக்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். கேவிஎன் நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் கேங்ஸ்டர் டிராமா கதைக்களத்தில் உருவாகியுள்ளது. இதில் நயன்தாரா, ருக்மணி வசந்த், கியாரா அத்வானி, ஹுமா குரேஷி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 1940 முதல் 1970 வரையிலான காலகட்டத்தில், கோவாவில் நிலவிய போதைப்பொருள் கடத்தல் மற்றும் மாபியா கும்பல்களை மையமாகக் கொண்ட ஆக்ஷன் திரில்லர் கதையாக ‘டாக்ஸிக்’ படம் உருவாகியுள்ளது. இந்த படத்தின் தமிழ்நாடு திரையரங்கு உரிமைகள் பல கோடிக்கு விற்பனையாகியுள்ளது. கிடைத்த தகவலின்படி, சுமார் ரூ.63 கோடிக்கு ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கடும் விமர்சனங்களை சந்தித்த டீசர் இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இந்த டீசர் கடும் விமர்சனங்களை சந்தித்தது. டீசரில் இடம்பெற்றுள்ள ஆபாச காட்சிகளுக்கு எதிர்ப்புகள் கிளம்பியது. அதில் இடம்பெற்ற அதிரடி மற்றும் வன்முறை காட்சிகள் குறித்து ரசிகர்கள் மத்தியில் விவாதங்கள் எழுந்தன. ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு இப்படம் கடந்த (மார்ச்) 19ந் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் காரணமாக, பரந்த அளவிலான பார்வையாளர்களை சென்றடைய வேண்டும் என கூறி வருகிற ஜூன் 4ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில், ஆங்கிலம் மற்றும் இந்திய மொழிகளில் ‘டாக்ஸிக்’ படம் வெளியாகும் என அறிவித்தது. ‘டாக்ஸிக்’ படக்குழு, படம் ஜூன் 4 அன்று படம் வெளியாகாது என்றும் விரைவில் ரிலீஸ் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கை வெளியிட்டது. பின்னர் இப்படம் ஆகஸ்ட் 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ‘டாக்ஸிக்’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான தபாஹி சமீபத்தில் வெளியானது. இப்பாடலின் தமிழ் வெர்சனை இயக்குநர் விக்னேஷ் சிவன் எழுத விஷால் மிஸ்ரா பாடியுள்ளார். இந்நிலையில், ‘டாக்ஸிக்’ படத்தின் புதிய பாடலான ‘தடுமாறுதே’ வீடியோ பாடலை வெளியிட்டுள்ளனர். தமிழில் விக்னேஷ் சிவன் எழுதிய இப்பாடலை சித்தார்த் பஸ்ரூர் பாடியுள்ளார். இப்பாடலின் வீடியோவில் நடிகை நயன்தாரா புகைபிடிப்பது போன்ற காட்சியும் இடம்பெற்றுள்ளது. RAYA and REBECCA, keeping all eyes locked on them! Video Song Out Now! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/cinema/cinemanews/yashs-toxic-film-thadumaarudhe-video-song-out




