மதுரை, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:- மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலின் மகா கும்பாபிஷேகம் யாருக்கானது? வெறும் பணக்காரர்களுக்கு மட்டுமானதா முதல்-அமைச்சரே? 17 ஆண்டுகளுக்கு பிறகு மதுரை மாநகரில் நடக்கும் இந்த மகா கும்பாபிஷேகத்தை கண்டுகளிக்க சாமானிய மக்கள் அனுமதிக்கப்படவில்லை என்பது உங்கள் அரசின் ஆணவத்திற்கான மற்றுமொரு சான்று. 9000 பாஸ்கள் எங்கே. இந்த கும்பாபிஷேகத்தை மக்கள் நேரில் கண்டு களிப்பதற்கென அச்சடிக்கப்பட்ட சுமார் 9000 பாஸ்கள் எங்கே போயின முதல்-அமைச்சரே? உங்கள் அமைச்சர்களுக்கு வேண்டியவர்களுக்கு மட்டுமே பாஸ்களை வழங்கி, அவர்களை முதல் வரிசையில் அமர வைப்பதற்கா அரசு செலவில் கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது. நேற்று மாலை முதல் கால்கடுக்க காத்திருப்பவர்களை, கும்பாபிஷேகம் நடக்கும் கோவிலின் அருகில் கூட நெருங்க விடாமல் உங்கள் அரசு தடுப்பதற்கு பக்தகோடிகள் என்ன பயங்கரவாதிகளா? பணம் படைத்தவர்களுக்கும், விஐபி-களுக்கும் மட்டும் தான் கோவிலுக்குள் அனுமதி என்று நீங்களே ஒரு நவீன தீண்டாமையை அரங்கேற்றுவது, என்ன மாதிரியான மனநிலை? முட்டுக்கட்டை பொதுவாக கும்பாபிஷேகம் நடைபெறும் கோவில்களில், தனி குழாய் ட்ரோன் மூலம் கோவிலைச் சுற்றியுள்ள பக்தர்களுக்கு தீர்த்தம் தெளிக்கப்படும் நிலையில், பாட்டில் தண்ணீரை வாளி பக்கெட்டில் கலந்து அப்பாவி மக்களை உங்கள் அரசு ஏமாற்றுவது எத்தனை பெரிய பாவம்? கோவில் கும்பாபிஷேக அழைப்பிதழ் அச்சடிப்பதில் இதுநாள் வரையிலும் பின்பற்றப்பட்டு வந்த நடைமுறையை மாற்றினீர்கள், கோவில் அறங்காவலர்களின் பெயர்களை உங்கள் இஷ்டத்திற்கு அழைப்பிதழில் இருந்து நீக்கினீர்கள், தற்போது பொதுமக்களுக்கு புண்ணியம் கிடைக்கக் கூடாது என முட்டுக்கட்டை போட்டுள்ளீர்கள். மொத்தத்தில், மதுரை பொறுப்பு அமைச்சர் நிர்மல்குமார் மற்றும் இந்து அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் ஆகியோரின் அதீத தலையீட்டினாலும், உங்கள் அலட்சியத்தாலும் உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலின் கும்பாபிஷேகம் ஏதோ உங்கள் அமைச்சர்களின் குடும்ப விழாவினை போல நடந்து முடிந்துள்ளது. இவை உங்கள் ஆட்சியின் மீது விழுந்த கரும்புள்ளிகள். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/who-is-the-madurai-meenakshi-amman-kumbabhishekam-for-nainar-nagendran-question




