நடிகர் வைபவ் நடிக்கும் புதிய திரைப்படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. ‘சென்னை 28, சரோஜா, கோவா’ படங்களில் நகைச்சுவை கதாப்பாத்திரத்தில் வைபவ் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். கப்பல் படத்தில் கதாநாயகனாக நடித்தார். பின் பிரியா பவானி சங்கர் மற்றும் வைபவ் இணைந்து 2017-ம் ஆண்டு ‘மேயாத மான்’ படத்தில் நடித்தனர். ‘மேயாத மான்’ சிறந்த படமாக அமைந்தது. மக்கள் அனைவராலும் ரசிக்கப்பட்ட படம். இதனால் வைபவின் புகழ் ஓங்கியது. பின்னர் ஷெரிப் இயக்கத்தில் வெளியான ‘ரணம் அறம் தவறேல்’ நடித்தார். நந்திதா ஸ்வேதா மற்றும் டான்யா ஹோப் முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்து இருந்தனர். இப்படம் வைபவிற்கு 25-வது படமாகும். ரணம் அறம் தவறேல் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், நடிகர் வைபவ் அறிமுக இயக்குநர் ஸ்ரீனி கூட்டணியில் உருவாகும் புதிய திரைப்படத்தின் டைட்டில் மற்றும் மோஷன் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்திற்கு ‘மாறுவேஷம்’ என பெயரிட்டுள்ளதாக வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளனர். இதில், நடிகர்கள் ராம்கி, வியன்னா, ஜார்ஜ் மரியன், முனிஷ்காந்த் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ராஜ்குமார் அமல் இப்படத்திற்கு இசையமைக்கிறார். நடிகர் வைபவ் இறுதியாக நடித்த பெருசு, சென்னை சிட்டி கேங்ஸ்டர் ஆகிய திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/cinema/cinemanews/vaibhavs-30th-film-title-announced




