சென்னை, நேற்று சென்னையில் பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமி அம்மாவின் 110-வது பிறந்தநாளைக் கொண்டாடப்பட்டது. அந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் கமல்ஹாசன் 'எம்.எஸ். ஏ லெகசி ஆன் ஸ்கிரீன்' படத்தின் படப்பிடிப்பு கிளாப் போர்ட்டு அடித்து தொடங்கி வைத்தார். பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பயோபிக் கர்நாடக இசை உலகின் முன்னணி பாடகிகளில் ஒருவர் எம்.எஸ். சுப்புலட்சுமி. இசை உலகில் தனக்கென தனி இடத்தைப் பிடித்த எம்.எஸ். சுப்புலட்சுமி, தனது குரலால் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் ரசிகர்களை கவர்ந்தவர். ‘குஞ்சம்மா’ என அன்புடன் அழைக்கப்பட்ட இவர், திரைப்படங்களிலும் பாடல்களை பாடி பிரபலமானார். பத்மபூஷன், பாரதரத்னா, சங்கீத கலாநிதி ஆகிய பட்டங்களை பெற்ற எம்.எஸ். சுப்புலட்சுமி கடந்த 2004-ம் ஆண்டு தனது 88-வது வயதில் உயிரிழந்தார். அவரது இசைப் பயணம், தனிப்பட்ட வாழ்க்கை, கலைத்துறையில் அவர் சந்தித்த சவால்கள் மற்றும் பெற்ற சாதனைகளை மையமாக வைத்து இந்த பயோபிக் திரைப்படம் உருவாக உள்ளது. 'எம்.எஸ். ஏ லெகசி ஆன் ஸ்கிரீன்' இவரின் வாழ்க்கை வரலாறை சினிமா படமாக்க கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்தப் படத்தை தெலுங்கில் ஜெர்ஸி, கிங்டம் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய கவுதம் தின்னனூரி இயக்க உள்ளார். அல்லு அரவிந்த், பன்னிவாசு, ராக்லைன் வெங்கடேஷ் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். இதில் எம்.எஸ்.சுப்புலட்சுமி கதாபாத்திரத்தில் நடிக்க முன்னணி நடிகைகள் திரிஷா, நயன்தாரா, ருக்மணி வசந்த் மற்றும் சாய் பல்லவி ஆகியோரிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் நடிகை ராஷ்மிகா மந்தனா இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த படத்திற்கு எம்எஸ்- எ லேகசி ஆன் ஸ்கிரீன் (M S - A Legacy on Screen) என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பை தொடங்கி வைத்த கமல் இந்த நிலையில், நேற்று சென்னையில் பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமி அம்மாவின் 110-வது பிறந்தநாளைக் கொண்டாடப்பட்டது. அந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் கமல்ஹாசன் 'எம்.எஸ். ஏ லெகசி ஆன் ஸ்கிரீன்' படத்தின் படப்பிடிப்பு கிளாப் போர்ட்டு அடித்து தொடங்கி வைத்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/cinema/cinemanews/kamal-haasan-inaugurated-the-filming-of-the-movie-ms-a-legacy-on-screen-by-sounding-the-clapperboard




