சென்னை, வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் மண்டலங்களில் ரூ. 58.46 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் கால்வாய் மற்றும் ஏரி மேம்பாட்டுப் பணிகளை இணை ஆணையாளர் (பணிகள்) செ.சரவணன், இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;- வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் மண்டலங்களில் ரூ.58.46 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் கால்வாய் மற்றும் ஏரி மேம்பாட்டு பணிகளை இணை ஆணையாளர் (பணிகள்) செ.சரவணன், இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேம்பாட்டு பணிகள் ஆய்வு மாநகராட்சி இணை ஆணையாளர் (பணிகள்) பெருங்குடி மண்டலம், வார்டு-188க்குட்பட்ட மயிலை பாலாஜி நகர் 4ஆவது பிளாக் பகுதி கால்வாயில் ரூ.8.68 கோடி மதிப்பீட்டில் 207 மீ. நீளம் மற்றும் 14.40 மீ. அகலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பாட்டுப் பணிகள், 1ஆவது பிளாக் கால்வாயில் ரூ.6.48 கோடி மதிப்பீட்டில் 235 மீ. நீளம் மற்றும் 13 மீ. அகலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பாட்டுப் பணிகள், ரூ.10.95 கோடி மதிப்பீட்டில் அணை ஏரியில் தூர்வாருதல், கரைகளை பலப்படுத்துதல், உள்வரத்து மற்றும் உபரிநீர் வெளியேற்ற கால்வாய் சீரமைப்பு பணிகள், ஆக்கிரமிப்பு மற்றும் ஆகாயத்தாமரை உள்ளிட்ட செடிகளை அகற்றுதல், மழைநீர் வடிகால்வாய் இணைப்புகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட சீரமைப்பு மற்றும் புனரமைப்புப் பணிகள், நாராயணபுரம் ஏரியில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கைப் பணிகள் ஆகியவற்றினைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். வால்வெட்டி தாங்கல் குளம் இதனைத் தொடர்ந்து, சோழிங்கநல்லூர் மண்டலம், வார்டு-195க்குட்பட்ட தலைமை செயலக அலுவலர் குடியிருப்பு பகுதியில் ரூ.12.42 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் சிறு பாலம் மற்றும் கால்வாய் மேம்பாட்டு பணிகள், செம்மஞ்சேரி-தாழம்பூர் பகுதியில் அமைந்துள்ள வால்வெட்டி தாங்கல் குளத்தினை ரூ.19.93 கோடி மதிப்பீட்டில் புனரமைத்து மேம்படுத்தும் பணி ஆகியவற்றினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, மாநகராட்சி இணை ஆணையாளர் (பணிகள்) நடைபெற்று வரும் பணிகளை வடகிழக்கு பருவமழைக்கு முன்னதாக விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது, தெற்கு வட்டார துணை ஆணையாளர் அஃதாப் ரசூல், மற்றும் அலுவலர் உடனிருந்தனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/monsoon-preparedness-works-worth-5846-crore-in-perungudi-and-sholinganallur




