சென்னை, தீபாவளி பண்டிகை நவம்பர் 8-ந்தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. சொந்த ஊர்களுக்கு செல்பவர்கள் தங்களது பயணத்தை முன்கூட்டியே திட்டமிடும் வகையில், 60 நாட்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதியை ரெயில்வே வாரியம் வழங்குகிறது. அதன்படி, தீபாவளி ரெயில் டிக்கெட் முன்பதிவு இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்குகிறது. அதாவது, நவம்பர் 5-ந்தேதி (வியாழக்கிழமை) சொந்த ஊர்களுக்கு பயணிப்பதற்கான டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்குகிறது. இதனைத்தொடர்ந்து, அடுத்தடுத்த நாட்களில் மற்ற தேதிகளுக்கான முன்பதிவு நடைபெறும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. பயணிகள் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம், செல்போன் செயலி மற்றும் ரெயில் நிலையங்களில் உள்ள டிக்கெட் கவுண்ட்டர்கள் மூலமாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம். பயணிகளின் எண்ணிக்கை வழக்கத்தை விட மிக அதிகமாக இருக்கும் என்பதால், முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத்தீர அதிக வாய்ப்பு உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/diwali-train-ticket-booking-begins-today




