சென்னை, சட்டசபையில் நேற்று கைத்தறி துறை மீதான மானியக்கோரிக்கை நடைபெற்றது. கதர் ஆடைகள் குறித்து உறுப்பினர்கள் பேசினார்கள். தே.மு.தி.க. உறுப்பினர் பிரேமலதா, 'கேப்டன் விஜயகாந்த் தனது வாழ்நாள் முழுவதும் கதர் ஆடையை மட்டுமே உடுத்தி இந்தியர்களுக்கும். அனைத்து தமிழர்களுக்கும் ஒரு உதாரணமாக வாழ்ந்தார்' என்றார். த.வெ.க. உறுப்பினர் சபரி ஐயங்கரன் (பெரியகுளம்) பேசுகையில், 'நான் காந்தி கிராம பல்கலைக்கழகத்தில் படித்தேன். அப்போது ஒரு நாள் மட்டும் கதர் ஆடையை அணிவோம். அப்படி இங்கே எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ஒரு நாள் கதர் ஆடையை மட்டும் அணிந்து வர வேண்டும் என்று தனது விருப்பத்தை தெரிவித்தார். அதற்கு சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், 'நான் கடந்த 10 ஆண்டுகளாக கதர் ஆடையைத்தான் அணிந்து வருகிறேன்' என்றார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/i-have-been-wearing-khadar-for-10-years-speaker-jcd-prabhakar




