சென்னை, இந்திய ராணுவத்தின் ராணுவ பொறியியல் சேவை சென்னை அலுவலகத்தின் புதிய தலைவராக இந்திய பொறியியல் சேவை அதிகாரி ஈஸ்வர் தத் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். இதுகுறித்து இந்திய அரசின் பத்திரிக்கை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- பதவியேற்பு இந்திய ராணுவத்தின் பொறியியல் சேவை பிரிவு சென்னை அலுவலக தலைவராக ஈஸ்வர் தத் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். 1992 ஆம் ஆண்டு தொகுப்பை சேர்ந்த இந்திய பொறியியல் சேவை அதிகாரியான இவர், ராணுவம் கடற்படை, விமானப்படை, பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு ஆகியவற்றில் பல்வேறு நிலைகளில் பொறுப்பு வகித்துள்ளார். இதற்கு முன் போபால் மண்டல தலைமை பொறியாளராக பணியாற்றிய போது ஜான்சி நகரில் இந்திய ராணுவத்தின் சார்பில் நாட்டிலேயே முதலாவதாக அமைக்கப்பட்ட புவி வெப்ப மின்சார பயன்பாட்டுடன் கூடிய கார்பன் உமிழ்வற்ற கட்டிடம் அமைப்பதில் பெரும் பங்கு வகித்தார். தற்போது சென்னை ராணுவ பொறியியல் பிரிவு அலுவலகத்தின் தலைவராக பொறுப்பேற்றுள்ளதன் மூலம் அவர் தென்னிந்திய பகுதிகளில் உள்ள அனைத்து ராணுவ பொறியியல் பணிகளுக்கும், கடலோர காவல் படை மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பின் பணிகளுக்கும் பொறுப்பு வகிக்க உள்ளார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/ishwar-dutt-takes-over-as-the-head-of-the-chennai-military-engineering-service-division




