இன்றைய பஞ்சாங்கம் பராபவ வருடம் ஆடி மாதம் 20-ந்தேதி செவ்வாய்க்கிழமை ஆங்கில தேதி: 5 மாதம்: ஆகஸ்ட் வருடம்: 2026 நட்சத்திரம்: இன்று மாலை 07.32 மணி வரை அஸ்வினி, பின்னர் பரணி. திதி: இன்று மாலை 06.09 மணி வரை சப்தமி, பின்னர் அஷ்டமி. யோகம்:மரண, சித்த யோகம். நல்ல நேரம் காலை: 09.15 – 10.15 நல்ல நேரம் மாலை: 2.00– 03.00 ராகு காலம்: நண்பகல் 12.00 – 01.30. எமகண்டம்: காலை 07.30 – 09.00. குளிகை: காலை 10.30 – 12.00. கௌரி நல்ல நேரம் காலை: 10.45 – 11.45 கௌரி நல்ல நேரம் மாலை: 06.30 – 07.30 சூலம்: வடக்கு. சந்திராஷ்டமம்: ஹஸ்தம், சித்திரை. இன்றைய ராசிபலன் மேஷம் பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்கள் உங்களை போற்றுவர். குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். தம்பதிகளிடையே அன்பு இரட்டிப்பாகும். புதுமையான சிந்தனைகள் வெற்றிக்கு வழிகாட்டும். அலுவலகத்தில் உங்கள் கருத்து ஏற்றுக்கொள்ளப்படும். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு ரிஷபம் நீண்ட நாள் முயற்சிக்கு இனிய பலன் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த மனக்கசப்புகள் விலகும். அலுவலகத்தில் உங்கள் கருத்துக்கு மதிப்பு கூடும். வருமானத்தில் சிறிய உயர்வு ஏற்படும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பர். தேவையற்ற செலவுகளை தவிர்க்கவும். ஆரோக்கியத்தில் புத்துணர்ச்சி காணப்படும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மிதுனம் உத்யோகத்தில் நீண்ட நாட்களாக தயங்கிய தைரியமாக இன்று நீங்கள் முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். உடல்நலம் மேம்படும். விற்பனையாளர்களுக்கு விற்பனை கூடும். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மாலை நேரம் மகிழ்ச்சிகரமாக அமையும். அதிர்ஷ்ட நிறம்: பச்சை கடகம் எதிர்பாராத வாய்ப்புகள் உங்களை தேடி வரும் நாள். பணியில் உங்கள் செயல்திறன் அனைவரையும் கவரும். பொருளாதார நிலை மெல்ல உயரத் தொடங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கலாம். நண்பர்களின் ஆலோசனை பயனளிக்கும். புதிய முதலீடுகளில் நிதானம் அவசியம். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை சிம்மம் உங்கள் தலைமைத்துவ திறன் வெளிப்படும். புதிய பொறுப்புகள் உங்களை தேடி வரும். பொருளாதார முன்னேற்றம் காணப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உடல்நலம் சிறப்பாக இருக்கும். மாணவர்கள் பாராட்டு பெறுவர். தன்னம்பிக்கை வெற்றிக்கு வழிவகுக்கும்.நினைத்த காரியங்கள் நிறைவேறும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு கன்னி இன்று சந்திராஷ்டமம் என்பதால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம் மனக்குழப்பங்கள் ஏற்படும் என்பதால் மிகவும் கவனம் தேவை. இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. பல காரியதடைகள் இருப்பதால் புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: இளம்பச்சை துலாம் பிள்ளைகளால் நன்மை உண்டு. கோர்ட் வழக்கு வகையில் விழிப்புத் தேவை. உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். பயணங்கள் ஏற்படும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். சகோதரருக்காக அலைச்சல் ஏற்படும். மகளுக்கு நல்ல வரன் அமையும். அதிர்ஷ்ட நிறம்: நீலம் விருச்சிகம் பயணங்கள் பலன் தரும். மன உறுதி அதிகரிக்கும். வழிபாடு வெற்றியை தரும். அலுவலகத்தில் மதிப்பு உயரும். வருமானம் அதிகரிக்கும் வாய்ப்பு உண்டு. குடும்ப உறவுகள் வலுப்பெறும். தொழிலில் புதிய மாற்றங்கள் சாதகமாக அமையும்.உடல்நலம் நன்றாக இருக்கும். நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவர். மாணவர்கள் திறமையை நிரூபிப்பர். அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு தனுசு எதிர்பார்த்த முயற்சிகள் நல்ல பலனைத் தரும்.உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். சொத்து சம்பந்தப்பட்ட வகையில் நன்மை உண்டு. நண்பர்கள் ஒன்று சேருவர். தங்கள் துணை தங்களுக்கு அனுசரனையாக இருப்பார். மாணவர்கள் விடாமுயற்சியுடன் செயல்படுவர். மன அமைதி நிலவும். புதிய வாய்ப்புகள் கதவைத் தட்டும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மகரம் மனதில் புத்துணர்ச்சி பிறக்கும். ஆன்மிக ஈடுபாடு நன்மை தரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பணவரவு அதிகரிக்கும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கலாம். மாணவர்கள் புதிய சாதனை படைப்பர்.உடல்நலம் மேம்படும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். உழைப்பின் பலன் தெளிவாக கண்ணுக்கு தெரியும். பணியிடத்தில் பாராட்டு கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம் கும்பம் மறைந்து இருந்த திறமைகள் வெளிப்படும். வேலை தொடர்பான நல்ல தகவல் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பணவரவு உயர வாய்ப்பு உள்ளது. சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியும். வீடு, வாகன பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். வெளி வட்டாரத்தில் அந்தஸ்து உயரும். அதிர்ஷ்ட நிறம்: ஊதா மீனம் இன்று இறை அருள் துணையாக இருக்கும். செயல்களில் நுணுக்கம் வெற்றியைத் தரும். அலுவலகத்தில் செல்வாக்கு உயரும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி பற்றிய பேச்சு எழும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.ஆரோக்கியம் மேம்படும். மாணவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் அமையும். புதிய நண்பர்கள் அறிமுகமாகலாம். மனதில் உற்சாகம் அதிகரிக்கும். அதிர்ஷ்ட நிறம்: பொன்னிறம் முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/astrology/today-rasi-palan/a-day-when-opportunities-will-come-looking-for-you-todays-horoscope-05082026




