சென்னை, கைதுக்கு முன் தனது மகன் இன்பநிதியை எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பாசத்தோடு கட்டி தழுவினார். கைது செய்யப்பட்டார் தஞ்சாவூர் ஆர்ப்பாட்டத்தில் பேசிய பேச்சு தொடர்பாக, தமிழக எதிர்க்கட்சி தலைவரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் இன்று காலை சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து தஞ்சாவூர் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டார். கட்டி தழுவினார் போலீசார் அவரது வீட்டு வாசலில் குவிக்கப்பட்டு, கைது நடவடிக்கைகள் தீவிரமடைந்த வேளையில் வீட்டில் பெரும் பரபரப்பு நிலவியது. அப்போது, வீட்டை விட்டு வெளியேறி போலீஸ் வாகனத்தில் ஏறுவதற்குச் சில நிமிடங்களுக்கு முன்பாக, தனது மகன் இன்பநிதியை உதயநிதி ஸ்டாலின் பாசத்தோடு கட்டி தழுவினார். மகனை அனைத்துவிட்டு இன்முகத்தோடு போலீசாருடன் சென்ற காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. காரசார விவாதம் உதயநிதி ஸ்டாலினை கைது செய்ய போலீசார் வீட்டுக்குள்ளே நுழைய முயன்றபோது, அவரது மனைவி கிருத்திகா உதயநிதி மற்றும் முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் போலீசாருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். எவ்வித முகாந்திரமும் இன்றி இந்த அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை அரங்கேற்றப்படுவதாக திமுகவினர் குற்றம் சாட்டினர். தொண்டர்கள் திரண்டதால் பதற்றம் கைது செய்யப்பட்ட உதயநிதி ஸ்டாலினை போலீசார் காரில் ஏற்றி அழைத்து செல்ல முயன்றபோது, நீலாங்கரை இல்லத்தின் முன்பு திரண்டிருந்த நூற்றுக்கணக்கான திமுக தொண்டர்கள் போலீஸ் வாகனத்தை முற்றுகையிட்டு சாலை மறியலில் குதித்தனர். இதனால் அந்த பகுதியே ஸ்தம்பித்தது. தொண்டர்களை கலைத்துவிட்டு போலீசார் தற்பொழுது அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக அழைத்து சென்றுள்ளனர். உதயநிதி ஸ்டாலின் கைதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் தற்பொழுது உச்சகட்ட பதற்றமும் பரபரப்பும் தொற்றிக்கொண்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/udayanidhi-stalin-hugs-son-ahead-of-arrest




