போபால், மாடல் அழகியும், நடிகையுமான திவிஷாவுக்கும், மத்தியபிரதேச மாநிலம் போபாலைச் சேர்ந்த வக்கீல் சமர்த் சிங்குக்கும் கடந்த ஆண்டு டிசம்பர் 9-ந் தேதி திருமணம் நடந்தது. போபாலில் கணவர் வீட் டில் வசித்து வந்த திவிஷா, அங்கு கடந்த மே 12-ந் தேதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து திவிஷாவின் குடும்பத்தினர் போலீசில் அளித்த புகாரில், திவிஷாவின் புகுந்த வீட்டினர் கூடுதல் வரதட்சணை கேட்டு திவிஷாவை சித்ரவதை செய்ததாகவும், மனஉளைச்சல் ஏற்படுத்தியதாகவும் கூறியிருந்தனர். அதன்பேரில், சமர்த் சிங்கும், அவரது தாயாரும், முன்னாள் மாவட்ட நீதிபதியுமான கிரிபாலா சிங்கும் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், போபாலில் உள்ள தனிக் கோர்ட்டில் சமர்த் சிங், கிரிபாலா சிங் ஆகியோர் மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/actress-divisha-suicide-case-charge-sheet-filed-against-husband-and-mother-in-law




