சென்னை, சென்னையில் அழகு நிலைய பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த கல்லூரி மாணவர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். அழகு நிலைய பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை சென்னை அசோக்நகர் பகுதியில் உள்ள பிரபல அழகு நிலையம் ஒன்றில் மேற்குவங்காள மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் வேலைபார்த்து வருகிறார். அவர் அதே பகுதியில் உள்ள வீட்டில் வசிக்கிறார். தினமும் இரவு 11 மணிக்கு வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு தனியாக நடந்து செல்வார். வழக்கம்போல நேற்று முன்தினம் இரவும் வீட்டிற்கு அவர் தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார். கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் கைது அப்போது 3 மர்ம நபர்கள் அவரது கையை பிடித்து இழுத்து, பாலியல் தொல்லை கொடுத்தனர். உடனே அந்த இளம்பெண் கூச்சல் போட்டார். சத்தம்கேட்டு பொதுமக்கள் ஓடிவந்து பாலியல் தொல்லை கொடுத்த 3 பேரையும் மடக்கிப் பிடித்து, அசோக்நகர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் ராபின்நெல்சன் (வயது 22), கிருஷ்ணகுமார்(25), மனோகார்த்திக்(20) ஆகியோரை கைது செய்தனர். மூதாட்டிக்கு பாலியல் தொல்லை; த.வெ.க. நிர்வாகி கைது இதைபோல அசோக்நகர் பகுதியில் 65 வயது மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்த த.வெ.க. நிர்வாகி ஆனந்த்(29) என்பவர் அசோக்நகர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/sexual-harassment-of-female-beauty-salon-employee-3-people-including-a-college-student-arrested




