அம்பை, அம்பை வாகைக்குளம் வாகைபதி ஸ்ரீமன் நாராயண சுவாமி கோவிலில் ஆவணி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அம்பாசமுத்திரம் அருகே உள்ள வாகைபதி ஸ்ரீமன் நாராயண சுவாமி கோவிலில் ஆவணி பெருந்திருவிழா விமரிசையாக நடைபெறும். அவ்வகையில் இந்த ஆண்டின் ஆவணி பெருந்திருவிழாவை முன்னிட்டு இன்று காலை 6 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது. தொடர்ந்து 11 நாட்கள் (செப். 4 முதல் செப். 14 வரை) திருவிழா நடைபெற உள்ளது. நாள்தோறும் இரவு 8 மணிக்கு அன்னதர்மமும், காலை மற்றும் இரவில் வாகன பவனியும் நடைபெறும். வாகைபதி அய்யா ஆதிநாராயண வைகுண்டர் நிச்சயித்தபடி கருடன், தண்டிகை, கஜேந்திரன், சிங்கம், அன்னம், சூரியன், நாகம், பூம்பல்லக்கு, குதிரை, அனுமன், இந்திரன், ரிஷப வாகனம் என தினமும் வெவ்வேறு வாகனங்களில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். தேரோட்டம் 8ஆம் திருநாளன்று அய்யா ஆதிநாராயண வைகுண்டர் குதிரை வாகனத்தில் கலிவேட்டையாடுதலும், 10ஆம் திருநாளான்று காலை சந்தனக் குடம் எடுத்தலும், இரவு இந்திர வாகன பவனியும், 11ஆம் திருநாளான செப்டம்பர் 14ஆம் தேதி திங்கள் மாலை 4 மணிக்கு திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான திருத்தேரோட்டமும், இரவு ரிஷப வாகன பவனியைத் தொடர்ந்து கொடியிறக்குதலும் நடைபெறும். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/devotional/ambai-vagaipathi-sriman-narayanasamy-temple-aavani-festival-begins



