விழுப்புரம், விழுப்புரம் அருகே லாரி மோதியதில் தனியார் நிறுவன ஊழியர்கள் 2 பேர் பரிதாபமாக பலியாகினர். நண்பர்கள் விழுப்புரம் அருகே உள்ள சிந்தாமணி மெயின் ரோட்டில் வசித்து வந்தவர் தர்மன் மகன் நரேஷ் (வயது 22). இவரும் சிந்தாமணி கன்னியம்மன் கோவில் தெருவை சேர்ந்த குமார் மகன் அருண்குமார் (23) என்பவரும் நண்பர்கள் ஆவர். இவர்கள் இருவரும் முண்டியம்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் ஊழியராக பணியாற்றி வந்தனர். லாரி மோதியது இந்நிலையில் அவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு ஒரு மோட்டார் சைக்கிளில் முத்தாம்பாளையம் புறவழிச்சாலையில் இருந்து சிந்தாமணி நோக்கி புறப்பட்டனர். மோட்டார் சைக்கிளை அருண்குமார் ஓட்டிச்சென்றார். முத்தாம்பாளையம் முருகன் கோவில் பாலம் அருகே சென்றபோது பின்னால் சென்னை மார்க்கத்தில் இருந்து திருச்சி நோக்கி இரும்பு பிளேட்டுகளை ஏற்றிக் கொண்டு சென்ற லாரி, அவர்களது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட நரேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அருண்குமார் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். சிகிச்சை இந்த விபத்து குறித்த தகவல் அறிந்ததும் விழுப்புரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் காயமடைந்த அருண்குமாரை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். வழக்குப்பதிவு விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவரான அரியலூர் மாவட்டம் கல்லூர் பகுதியை சேர்ந்த வினோத் (35) என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/tragedy-near-villupuram-two-private-company-employees-killed-after-being-hit-by-a-lorry




