புதுச்சேரி, காரைக்காலில் செயல்பட்டு வரும் சில ஹோட்டல்களில், இறைச்சிகளைப் பல நாட்கள் பதப்படுத்தி வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குப் புகார்கள் சென்றன. அதனடிப்படையில் பெண் துணை ஆட்சியரான பூஜா, நகராட்சி ஆணையர் சுபாஷ் உள்ளிட்ட அதிகாரிகளுடன் காரைக்காலில் செயல்படும் ஹோட்டல்களில் இன்று அதிரடி ஆய்வை மேற்கொண்டார். பறிமுதல் செய்யப்பட்ட அழுகிய இறைச்சி அதனடிப்படையில் பாரதியார் சாலையில் செயல்பட்டு வரும் `எமிரேட்ஸ் ஃபுட்லேண்ட்’ (Emirates Food land) என்ற ஹோட்டலில் ஆய்வு செய்தார். அப்போது அங்கு நாட்கணக்கில் பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்த இறைச்சிகள், அழுகிய காய்கறிகள், காலாவதியான சமையல் பொருட்கள் இருந்தைப் பார்த்த அவர், உரிமையாளர்களிடம் சரமாரியாக கேள்வி எழுப்பி அவற்றை பறிமுதல் செய்தார். தொடர்ந்து அந்த ஹோட்டலை ஆய்வு செய்தபோது, அங்கு பூட்டப்பட்டிருந்த ஒரு அறையில் இருந்து ரத்தம் கசிந்து வெளிவருவதைப் பார்த்தார். அதையடுத்து அந்த அறையைத் திறக்கும்படி உரிமையாளர்களிடம் கூறினார். ஆனால் அந்த அறையில் சாவி தற்போது தங்களிடம் இல்லை என்று கூறி, திறக்க மறுத்தனர் உரிமையாளர்கள். அதில் டென்ஷனான துணை ஆட்சியர் பூஜா, பூட்டை உடைத்து அறையைத் திறக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். துணை ஆட்சியர் பூஜா உள்ளிட்ட அதிகாரிகள் அதன்படி பூட்டை உடைத்து திறக்கப்பட்ட அந்த அறையில் இரண்டு ஃபிரீஸர்கள் இருந்தன. அதிலிருந்து ரத்தம் கசிந்து கொண்டிருந்தது. அதைத் திறந்து பார்த்தபோது அழுகிய நிலையில், புழுக்கள் நெளிந்தபடி இறைச்சிகள் பதப்படுத்தப்பட்டிருந்தன. அதைப் பார்த்து அதிர்ந்து போன துணை ஆட்சியர், அந்த ஃப்ரீஸர்களை வெளியே இழுத்து வந்து திறந்து ஆய்வு செய்தார். சுமார் 50 கிலோ அளவில், மிகுந்த துர்நாற்றம் வீசிய அந்த இறைச்சிகளைப் பறிமுதல் செய்து அழிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதையடுத்து மேலும் சில ஹோட்டல்களில் ஆய்வு மேற்கொண்ட அவர், அவற்றில் இருந்தும் கிலோக்கணக்கில் கெட்டுப்போன, அழுகிய இறைச்சிகளைப் பறிமுதல் செய்ய உத்தரவிட்டார். துணை ஆட்சியர் பூஜாவிடம் இதுகுறித்துக் கேட்டபோது, ``காரைக்காலில் செயல்படும் ஹோட்டல்களில் வழங்கப்படும் உணவுகள் தரமானதாக இல்லை என்று எங்களுக்கு நிறைய புகார்கள் வந்தன. அதனடிப்படையில், நான், மாநகராட்சி ஆணையர் மற்றும் உணவு தொடர்பான வணிகங்களுக்கு உரிமங்கள் வழங்கும் அதிகாரியைக் கொண்டு ஒரு ஆய்வுக் குழுவை அமைத்தோம். Doctor Vikatan: டிரெண்டாகும் Tai Chi வாக்கிங். அப்படி என்ன ஸ்பெஷல்? அதன்படி இன்று எமிரேட்ஸ் என்ற ஹோட்டலை ஆய்வு செய்தபோது அங்கு பல பிரச்னைகளும், விதிமீறல்களும் இருப்பதைக் கண்டுபிடித்தோம். குறிப்பாக, மனிதர்கள் சாப்பிடுவதற்குத் தகுதியற்ற, அழுகிப்போன 50 கிலோ இறைச்சியை பதப்படுத்தி வைத்திருந்ததைக் கண்டுபிடித்து, பறிமுதல் செய்தோம். அதேபோல காலாவதியான எண்ணெயில் அவர்கள் சமைத்ததையும் கண்டுபிடித்தோம். காய்கறிகள் கூட அழுகிய நிலையில் இருந்தன. துணை ஆட்சியர் பூஜா ஹோட்டலில் கடைப்பிடிக்க வேண்டிய எந்தவித சுகாதாரத்தையும் அவர்கள் கடைப்பிடிக்கவில்லை” என்றார். காரைக்கால் ஹோட்டல்களில் நடைபெற்ற இந்த அதிரடி ஆய்வுகள், அந்த மாவட்ட மக்களைக் கதிகலங்க வைத்திருக்கிறது. புதுச்சேரி: மட்டன் பிரியாணியில் கரப்பான் பூச்சிகள்; ஹோட்டலுக்குச் சென்றவர்கள் மருத்துவமனையில் அனுமதி முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.vikatan.com/government-and-politics/in-puducherry-hotel-shocks-district-collector-by-50-kg-of-rotten-meat-infested-with-maggots




