மதுரை, தமிழகத்தில் மின் பற்றக்குறை இல்லை என்று மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார் கூறி வருகிறார். ஆனாலும் தொடர்ந்து பல்வேறு இடங்களில் அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள். இந்த நிலையில், மதுரையில் உள்ள சட்டக்கலூரியில் இன்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவின் போது திடீரென மின் வெட்டு ஏற்பட்டது. பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட உயர் நீதிமன்ற நீதிபதி ஜெகதீஷ் சந்திரா பேசிக்கொண்டு இருந்த போது சில மின்சாரம் தடைபட்டது. இதனால் நிகழ்ச்சியில் சலசலப்பு ஏற்பட்டது.எனினும், சில வினாடிகளில் மீண்டும் மின்சாரம் வந்தது. இதனால், வழக்கம் போல நிகழ்ச்சி நடைபெற்றது. மின்சாரத்துறை அமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சியிலே மின் தடை ஏற்பட்டதாக விமர்சனங்கள் எழுந்த நிலையில், இது குறித்து அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் அளித்துள்ளார். அமைச்சர் நிர்மல் குமார் இது குறித்து கூறியிருப்பதாவது: நிகழ்ச்சி நடைபெற்ற இடத்திற்கு ஜெனரேட்டர் மின்சாரமே வழங்கப்பட்டது மின்சாரம் ஒரு ஜெனரேட்டரில் இருந்து மற்றொரு ஜெனரேட்டருக்கு மாற்றப்பட்டபோது, 5 விநாடிகள் மின்தடை ஏற்பட்டது” என்று பதிவிட்டுள்ளார் முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/did-a-power-outage-occur-during-the-event-i-attended-in-madurai-minister-nirmal-kumar-clarifies




